Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸிலிருந்து வெளியேறும் முதல் நபர் இவர்தான்! தெய்வமே உங்கள அதுக்குள்ள அனுப்ப போறாங்களா?
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியானது மக்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறி வருகிறது
அந்த வகையில் இந்த சீசனில் வெளியேறும் முதல் போட்டியாளர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் அஜித், ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி நாராயணன், கேப்ரில்லா என்ற ஏழு போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் யாருக்கு மக்களிடமிருந்து குறைந்த வாக்குகள் வந்திருக்கிறதோ அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பதே விதிமுறை.
இதில் சனம் செட்டியும் ரேகாவும் கடைசி இடத்தை பிடித்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் இருவரில் ரேகா மிகக் குறைந்த வாக்குகளை பெற்றிருப்பதால், அவரே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நபர் என்று தெரியவந்துள்ளது.
எனவே ரசிகர்கள், ‘சனம் ஷெட்டியே இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர்’ என்று கணித்து இருக்கும் நிலையில் புதிய திருப்பமாக ரேகா வெளியேறுவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.
