Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் சபதத்தில் தோல்வி.. ரயில் முன்பாய்ந்து மாணவி தற்கொலை!
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சென்னப்பட்டனா தாலுகாவில் உள்ள கனசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரா. விவசாயி. இவருடைய மனைவி ஹேமாவதி. இவர்களது மகள் நிகிதா (18). பியூ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் இந்த தேர்வில் மாவட்ட அளவில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11ம் தேதி பியூ கல்லூரி 2ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் நிகிதா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் நிகிதா காணப்பட்டார்.
இந்த நிலையில் மண்டியா மாவட்டம் மத்தூருக்கு வந்த அவர் ஓடும் ரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் நிகிதாவின் உடலை மீட்டனர்.
விசாரணையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
