அவர் தெருத்தெருவா விளம்பரம் செஞ்சா தான் படம் ஓடும்.. ஒரே மேடையில் பட்டைய கிளப்பிய ரஜினியின் மேஜிக்

Actor Rajini: சமீபத்தில் வெளிவந்து, மக்களால் கொண்டாடப்பட்டு வரும் படம் தான் ஜெயிலர். பல பிரச்சனைகளை தாண்டி சாதித்து காட்டிய தலைவரின் சம்பவம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

எங்க திரும்பினாலும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நீயா நானா என்ற போட்டிக்கு இடையே தற்பொழுது ரஜினி தெறிக்க விட்ட சம்பவமாய் பார்க்கப்படுவது ஜெயிலர் படம் தான். இரண்டு நாட்களில் 150 கோடி வசூல் சாதனை படைத்த இப்படத்தை பல தலைமுறையினர் கொண்டாடி வருகின்றனர்.

Also Read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்

அக்கால கட்டத்தில் பார்க்கப்பட்ட நாயகன், தளபதி போன்று தற்பொழுது விக்ரம், ஜெயிலர் படத்தை தூக்கி கொண்டாடி வரும் ரசிகர்கள் ஏராளம். இருப்பினும் கமலை பொறுத்தவரை, தன் படத்திற்காக எந்த லெவலுக்கும் சென்று ஊர் ஊராக புரமோஷன் செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஆனால் தலைவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஆடியோ லாஞ்சில் செய்த மேஜிக் பல தலைமுறையினரை திரும்பி பார்க்க வைத்தது. இவர்கள் இருவரின் படங்களில் இது பெரிதா அது பெரிதா என்று புரட்டி போட்டுக் கொண்டு பேசி வருவது எந்த ஒரு நியாயமும் இல்லை.

Also Read: விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்து படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

அவை தேவை இல்லாத பேச்சுகளாகத்தான் இருந்து வரும். ரஜினி படம் என்பது முதல் நாள் முதல் ஷோவில் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவலை தூண்டும் விதமாய் இருப்பதே ரஜினியின் மேஜிக்காக பார்க்கப்படுகிறது. இந்த மேஜிக் தான் அவரை சூப்பர் ஸ்டாராய் இருக்க செய்கிறது.

பல வருடங்களாகவும், பல தலைமுறைகளை தாண்டியும் தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருப்பதே அவரின் இத்தகைய வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதை முறியடிப்பது என்பது ஒரு பொழுதும் சாத்தியமாகாத ஒன்று. மேலும் மக்கள் ரஜினி படங்களை ஒரு வின்டேஜ் படமாய் கொண்டாடி வருகின்றனர் என்பதற்கு ஜெயிலர் படம் தான் சான்றாகும்.

Also Read: ராஜேஷ் இயக்கத்தில் ஹீரோக்கு இணையாக சந்தானம் நடித்த 5 படங்கள்.. தேனடையை விடாமல் துரத்திய பார்த்தா

- Advertisement -spot_img

Trending News