தமிழ் சினிமாவை பொறுத்தவரை சாட்டிலைட் ரைட்ஸ் என்பது மிக முக்கியம். ஆனால், முன்பு போல் தற்போது சாட்டிலைட் பிஸினஸ் ஆரோக்கியமாக இல்லை. ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்கள் படங்கள் மட்டுமே வியாபாரம் ஆகி வருகின்றது, சிறிய படங்கள் வெளிவந்து பாசிட்டிவ் டாக் வந்தாலே இந்த படத்தை வாங்கலாமா? என யோசிக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, TRP-க்காக படம் வெளிவந்த சில மாதங்களில் டிவியில் ஒளிப்பரப்பிய படங்கள் எது என்பதை பார்ப்போம்.

பைரவா

பைரவா படத்தை நீ போட்ட என பல மிரட்டல்களை சந்தித்தும் அசராமல் சன் தொலைக்காட்சி இந்த படத்தை நேற்று ஒளிப்பரப்பியது, இப்படம் வெளிவந்து இன்னும் 100 நாட்கள் கூட ஆகவில்லை.

வல்லினம்

அறிவழகன் இயக்கத்தில் நகுல் நடித்த வல்லினம் நல்ல திரைக்கதை, மெசெஜ் இருந்தும் படம் பெரிதாக போகவில்லை, திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே (படம் வெளிவந்த 30 நாட்களுக்குள்) ஜெயா தொலைக்காட்சியில் படத்தை ஒளிப்பரப்பினர்.

கிழக்கு கடற்கரை சாலை

ஸ்ரீகாந்த் நடித்த கிழக்கு கடற்கரை சாலை படம் திரையரங்கு வந்த 1 மாதத்திற்குள் தொலைக்காட்சிக்கு வந்தது.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

தங்கர் பச்சன் இயக்கிய சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படம் 20 நாள் கூட தாண்டவில்லை, ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது.

வந்தான் வென்றான்

ஜீவா, டாப்ஸி, ரமணா, சந்தானம் நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த வந்தான் வென்றான் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்து தோல்வியை சந்தித்த படம், ஆனால், இப்படம் தோல்வி என்று சொல்வதற்கு முன்பே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.

பூவெல்லாம் உன்வாசம்

அஜித் திரைப்பயணத்திலேயே உடனே தொலைக்காட்சிக்கு வந்த படம் பூவெல்லாம் உன் வாசம் தான், படம் வெளியாகிய 3 மாதத்திலேயே சன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது.

நண்பன்

விஜய் திரைப்பயணத்தில் பெரிய ஹிட் பட வரிசையில் இணைந்த நண்பன் TRP-க்காக 100 நாட்களில் விஜய் தொலைக்காட்சி டெலிகாஸ்ட் செய்தது.

வீரம்

அஜித் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த வீரம் பொங்கலுக்கு வர, அந்த வருட மே 1-க்கே அஜித் பிறந்தநாள் முன்னிட்டு ஒளிப்பரப்பினார்கள்.

அனேகன்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படமும் வெளிவந்த சில மாதங்களிலேயே தொலைக்காட்சிக்கு வர, அவருடைய ரசிகர்கள் கோபமாக தொலைக்காட்சி மீது கருத்துக்கள் வைக்க, பிறகு தனுஷே ‘இதுப்பற்றி எனக்கே தெரியவில்லை, அது தயாரிப்பாளர்கள் எடுத்து முடிவு’ என கூறி ரசிகர்களை சமாதானம் செய்தார்.