230 கோடி வசூல் படத்தை முறியடிக்க போகும் கமலின் விக்ரம்.. கடந்த ஐந்து வருடங்களில் நடக்காத சாதனை

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பெரிய ஹீரோக்கள் படங்களில் மட்டுமே வசூல் சாதனை படைத்து வருகிறது. ஏனென்றால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக அவரது ரசிகர்கள் படத்தை வெற்றியடையச் செய்து விடுகிறார்கள்.

இந்நிலையில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படம் வெளியானது. சிம்புவும் சில வருடங்களாக ஒரு பிளாக்பஸ்டர் படத்திற்காக காத்திருந்த நிலையில் மாநாடு படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இதனால் சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் சாதனையை மாநாடு படம் முறியடித்ததாக கூறப்பட்டது.

ஆனால் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படம் 117 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் கொரோனா பரவலுக்கு பின் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு தான் உள்ளது.

சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 230 கோடிகளை தாண்டி வசூல் வேட்டையாடி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான படங்களில் வசூலில் முதலிடத்தில் மாஸ்டர் படம் தான் உள்ளது.

தற்போது வரை மாஸ்டர் படத்தின் வசூலை எந்த படைத்தாலும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. பான் இந்திய படமாக வெளியான இப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாள் வசூல் சாதனை படைத்த விக்ரம் படம் மாஸ்டர் படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே இயக்குனரின் படம் தொடர்ந்து இவ்வாறு வசூல் சாதனை படைத்து வருவதால் லோகேஷின் மார்க்கெட் தற்போது தமிழ் சினிமா பல மடங்கு உயர்ந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்