fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முன்றாம் நாளே அடிதடியில் ஆரம்பித்த பிக்பாஸ்.. வீடியோ எடிட்டிங்தான் கொஞ்சம் மட்டமா இருக்கு

bigg-boss-promo

Videos | வீடியோக்கள்

முன்றாம் நாளே அடிதடியில் ஆரம்பித்த பிக்பாஸ்.. வீடியோ எடிட்டிங்தான் கொஞ்சம் மட்டமா இருக்கு

நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் ராஜு கஷ்டத்த காட்டக் கூடாதுன்னு சொன்னவுடனே பிக் பாஸ் மண்டையில பல்பு எரிஞ்சுதோ என்னவோ இன்னைக்கு அந்த வார்த்தையை வெச்சே எபிசோட கொண்டு வந்துட்டாரு.

இன்றைய ப்ரோமோல நம்ம இமான் அண்ணாச்சி தான் பேச வந்திருக்காரு. அண்ணாச்சி பேசிட்டு வந்த உடனே நம்ம போட்டியாளர்கள் கருத்துக்கூற ஆரம்பிச்சுட்டாங்க. நமிதா மாரிமுத்து கஷ்டப்பட்டால்தான் ஒரு நிலைமைக்கு நாம வர முடியும் அப்படின்னு சொல்றாங்க.

அண்ணாச்சி பேசும்போது சிரிச்சதுக்காக நிரூப் கிட்ட சிபி கோவமா பேசினார். இதுக்கு அண்ணாச்சி சிரிக்கலாமே, தப்பு இல்லைன்னு சொல்றாரு. அப்படி என்னதான் அண்ணாச்சி சொன்னாருன்னு நம்ம யாருக்கும் புரியல.

இது இப்படி இருக்க அபிஷேக் ஒரு பக்கம் நிரூப் கிட்ட நீ என்ன வேணா பேசு அப்படின்னு ஹை பிட்சுல கத்துராரு. இதைப்பார்த்த நமீதா பிக்பாஸ்ல சண்ட ஆரம்பிச்சிடுச்சு அப்படின்னு சொல்றதோட ப்ரோமோ முடியுது.

ப்ரோமோ பாக்கும் போது நல்லா தான் இருக்கு ஆனா எபிசோட் பாத்தா ரொம்ப மொக்கையா இருக்கு. எடிட்டர் ரொம்ப குசும்புக்காரர் என்று ரசிகர்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

கடைசியாக நம்ம பிக்பாஸ் ஆசைப்பட்ட மாதிரி சண்டை ஆரம்பிச்சிடுச்சு. முதல்ல கொஞ்சம் கொளுத்தி போட்டுட்டு அப்புறம் சண்டை ஆரம்பிச்சாச்சா தானே பார்க்க நல்லா இருக்கும். இப்பவே இப்படி சண்டை போட்டா மீதி இருக்கிற நாள என்ன ஸ்கிரிப்ட் வைச்சு ஓட்டுவீங்க பிக்பாஸ்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top