மும்பை: என் திருமணம் ஒர்க்அவுட் ஆகாமல் போனதற்கு யாரும் காரணம் இல்லை. எல்லாம் என் தப்பு தான் என பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா நடித்துள்ள டியர் மாயா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அன்புக்காக ஏங்கும் நடுத்தர வயது பெண்ணாக அவர் நடித்துள்ளார்.

மனிஷாவின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது.

திருமணம்

மனிஷாவுக்கும் நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தஹாலுக்கும் கடந்த 2010ம் ஆண்டு காத்மாண்டுவில் திருமணம் நடந்து. 2012ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

கனவு

திருமணம் பற்றி ஏதேதோ கனவு வைத்திருந்தேன். மோசமான உறவில் இருந்தால் அதில் இருந்து வெளியேறுவது நல்லது. அதில் எந்த வருத்தமும் இல்லை என மனிஷா தெரிவித்துள்ளார்.

பொறுப்பு

அவசரப்பட்டு திருமணம் செய்து அதன் பிறகு இது நமக்கு ஒத்து வராது என்று உணர்ந்தேன். இதற்கு நானே முழுப் பொறுப்பு ஏற்கிறேன். யார் தப்பும் கிடையாது, என் தப்பு தான் என்கிறார் மனிஷா.

காதல்

இனி என் வாழ்வில் காதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கை, என் வேலை நிம்மதியாக உள்ளது. தற்போது இது போன்று வாழ்ந்து விட நினைக்கிறேன். பின்பு பார்க்கலாம் என மனிஷா கூறியுள்ளார்.

புற்றுநோய்

நான் புற்றுநோயோடு போராடியபோது எனக்கு நெருக்கமானவர்கள் என்னை கண்டுகொள்ளவில்லை. நோயுடன் நான் போராடியதை பார்க்க விரும்பாமல் அவர்கள் வரவில்லை என்றே நினைக்கிறேன் என்கிறார் மனிஷா.