விவேகம் படம் பக்கா மாஸாக தயாராகி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இயக்குனர் சிவா இதுவரை அஜித்தை வைத்து இயக்காக ஒரு பாணியில் இந்த புதிய படத்தை எடுத்துள்ளார்.

இதுவரை படக்குழுவினர் கொடுத்த பேட்டிகள் அனைத்தையும் பார்க்கும் போது அவர்கள் படம் மேல் அவ்வளவு உறுதியாக இருக்கின்றனர். கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் வேறலெவல் மகிழ்ச்சி கொடுக்கும் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் படத்தில் வரும் சர்வைவா பாடல் யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் #SURVIVASongHits1CroreViews என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். தற்போது கிடைத்துள்ள தகவலின் படி விவேகம் ட்ரெய்லர் வீடியோ தயார் நிலையில் உள்ளாதாகவும் எப்போது வேண்டுமானாலும் விவேகம் ட்ரெய்லர் வெளியாகலாம் எனவும் நம்பதகுந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கிறார்கள்.ajith vivegam

ஆனால், இன்று அல்லது நாளை மாலைக்குள் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என தெரிகிறது. மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானதில் இருந்து விவேகம் படம் மீதான ரசிகர்களின் காய்ச்சல் கணிசமாக குறைந்துள்ளதாக படக்குழு நம்புகிறதாம். இதனால், ரசிகர்களின் பல்ஸை எகிற வைக்க விரைவில் விவேகம் ட்ரெய்லர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.