அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படத்தின் பிசினஸ் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. சர்வதேச தரத்தில் உருவாகியிருக்கும் ‘விவேகம்’ திரைப்படத்தின்மீது, ‘ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமா உருவாகாதா?’ என்று ஏங்கிக்கொண்டிருந்த வெளிநாடுவாழ் தமிழர்களின் கவனம் திரும்பியிருப்பதால் இந்தியாவில் நடைபெறும் பிசினஸைப் போலவே வெளிநாட்டு வியாபாரமும் கடந்த மாதம் நடைபெற்றது.அந்த வியாபாரத்தில் ‘விவேகம்’ திரைப்படத்தை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும் திரையிட விற்பனை செய்திருக்கிறார்கள். அப்போது தொடங்கிய ‘விவேகம்’ பிசினஸ் தமிழ்நாட்டு வியாபாரத்தை முடித்துக்கொண்டு சற்று முன் தொலைக்காட்சி உரிமத்துக்கான வியாபாரத்தையும் முடித்திருக்கிறது.vivegam special show

இதன்படி, சிவகார்த்திகேயன் பொன் ராம் இணையும் அடுத்தத் திரைப்படத்துடன் வியாபாரத்தைத் தொடங்கிய சன் டி.வி, அடுத்து நயன்தாராவின் அறம் திரைப்படத்தையும் வாங்கியது. இப்போது, விவேகம் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையையும் ரூ.35 கோடிக்கு பேசி முடித்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடி வரை ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் தற்போது இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி கைப்பற்றியுள்ளது, இதுவரை வந்த அஜித் படங்களிலேயே அதிக தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் போனது விவேகம் தானாம்.இதோடு சன் டிவி, சூர்யாவின் சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களையும் கைப்பற்றியுள்ளது.