முதல் படத்திலேயே மிரள வைத்த 5 நடிகர்கள்.. அதிலும் பட்டையை கிளப்பிய பருத்திவீரன்!

தமிழ் சினிமாவில் நுழைந்த முதல் படத்திலேயே இப்படி ஒரு நடிப்பா என ரசிகர்களை மிரள வைத்த ஐந்து நடிகர்களைப் பற்றி இன்றும் பெருமையாக பேசுகின்றனர். அந்த அளவிற்கு தங்களுடைய இயல்பான நடிப்பை காட்டு இந்த ஐந்து நடிகர்களும் கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தனர்.

பருத்திவீரன்-கார்த்தி: கடந்த 2007ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில்தான் முதன்முதலாக கார்த்திக் அறிமுக நாயகனாக பருத்தி வீரனாக பிரியாமணி உடன் சேர்ந்து நடித்திருப்பார். இந்தப்படத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெற்றோருக்கு பிறந்த மகனாக கார்த்திக் சித்தப்பாவின் ஆதரவுடன் ஊரை சுற்றும் ரவுடியாக முதல் படத்திலேயே கெத்து காட்டியிருப்பார்.

இவனுடைய மாமன் மகள் முத்தழகு, இவனை வெறித்தனமாக காதலித்ததால் ஒருகட்டத்தில் இவனும் காதல் வயப்பட்டு, ‘இனி நீ ஒத்தையா திரிய வேணாம். இங்கேயும் காதல் வந்திருசுல்ல’ என பருத்தி வீரன் முத்தழகு இடம் பேசிய டயலாக் செம ஃபேமஸ் ஆனது. அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுக நாயகனாக நடித்த கார்த்திக், என்னதான் நடிகர் சிவகுமாரின் மகன் என்றாலும் பருத்தி வீரனாக இந்த படத்தில் படு லோக்கலாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் வெகு சீக்கிரமாகவே குடிகொண்டார்.

விக்ரம் பிரபு-கும்கி: நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனான விக்ரம் பிரபு கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். தன்னுடைய முதல் படத்திலேயே லக்ஷ்மி மேனனுடன் ஜோடி சேர்ந்து விக்ரம் பிரபு பொம்மன் என்ற கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்திருப்பார். இந்தப்படத்தில் மலைகிராம பெண்ணான அல்லி, பொம்மைனுக்கும் இடையே இருக்கும் அழகான காதலை வெளிக்காட்டி இருப்பார்கள். அதிலும் விக்ரம் பிரபு, சிவாஜியின் பேரன் என்ற பெருமையை காப்பாற்றும் அளவுக்கு அலட்டலே இல்லாமல் தத்ரூபமாக நடித்திருப்பார்.

ஜெயம் ரவி-ஜெயம்: தன்னுடைய அண்ணன் எம். ராஜா இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இந்தப்படத்தில் சதா உடன் ஜெயம் ரவி தன்னுடைய காதலை இயல்பாக காண்பித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கில்லியவர். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பிடித்ததனாலேயே ரசிகர்களின் ஆதரவை எளிதில் பெற்று விட்டார். அதன் பிறகு இவர் நடித்த அடுத்தடுத்த படங்களின் வெற்றிக்கும் இந்தப் படமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது

ஸ்ரீகாந்த்-ரோஜாக்கூட்டம்: கடந்த 2002 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படமான ரோஜா கூட்டம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இந்தப்படத்தில் ஸ்ரீகாந்த் பூமிகாவை பார்த்தவுடன் காதல் வயப்பட்டு, பின்பு அவள் தன்னுடைய பக்கத்து வீட்டிலேயே குடியேறியதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

அதன்பிறகு அவள் தன்னுடைய நண்பரின் காதலி என தெரிந்ததும் மனமுடைந்து, நட்புக்காக காதலையே மறக்க துணிகிறான். இறுதியில் காதலிக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்து கடைசியில் காதலியின் காதலன் அவளை தூக்கி எறிந்ததால் தன்னுடைய காதலை வெளிப்படுத்த முடியாமல் கடைசியில் ஸ்ரீகாந்தின் தாய் பூமிகாவிடம் வந்து தன்னுடைய மகனின் காதலை சொன்னதால் அதன்பிறகு பூமிகா-ஸ்ரீகாந்த் இருவரும் ஒன்று சேர்கின்றனர். காதலை வித்தியாசமாக காண்பித்து இருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த்தின் நடிப்பு பார்ப்போரை கலங்கடிக்கும் வகையில் அந்த படத்தோடு ஒன்றிக்க வைத்திருக்கும்.

விஷால்-செல்லமே: என்னதான் பிரபல தயாரிப்பாளரின் மகன் என்றாலும் நடிப்பு இருந்தால் மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் அவர்களை ஏற்றுக் கொள்வார்கள். அப்படித்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரபல தயாரிப்பாளரின் மகன் நடிகர் விஷால். இவர் இந்தப் படத்தில் ரகுநந்தன் என்ற கதாபாத்திரத்தில் சிபிஐ அதிகாரியாக தன்னுடைய அசத்தலான நடிப்பை காட்டி மிரள வைத்திருப்பார்.

எனவே இந்த ஐந்து கதாநாயகர்களும் தாங்கள் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவரும் விதத்தில் மிரட்டலான நடிப்பை காண்பித்த காரணமாகவே அடுத்தடுத்த பட வாய்ப்புகளை மிக எளிதாகவே பெற்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்