தயவு செய்து எண்ணிய யூஸ் பண்ணிக்கோங்க.. கமலிடம் கெஞ்சிய ஹீரோ

கமலஹாசன் சில வருடங்களாக அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டு வந்தார். ஆனால் தேர்தல் முடிவால் அரசியலை சற்று தள்ளி வைத்துவிட்டு மீண்டும் சினிமாவில் முழு வீச்சாக இறங்கியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் அடுத்தடுத்து படங்களிலும் நடிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதுதவிர படங்கள் தயாரிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒரு கால கட்டத்தில் அதிக படங்களை தயாரித்த நிறுவனம் என்ற பெயர் ஏவிஎம் நிறுவனத்திற்கு உண்டு. ஆனால் அதற்கு போட்டியாக தற்போது பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது.

இதனால் தற்போது இவர்கள்தான் எல்லா படத்தையும் தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணியில் இருக்கும் லைகா நிறுவனம் அதிகப் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது உள்ள நடிகர், நடிகைகளை சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி தங்கள் படங்களை தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் லைகாவுக்கு போட்டியாக கமலும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். கமலஹாசன் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் படத்தை கமலஹாசன் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து தற்போது வசூல் மன்னனாக இருக்கும் விஜய்யின் படத்தை தயாரிக்க கமல் ஆசைப்படுவதாக கூறப்பட்டது. இதனால் தளபதி 68 படத்தை கமல் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் கமல் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்க கால்ஷீட் பெற்று வருகிறார்.

ஆனால் தற்போது ஜெயம் ரவி தானாகவே முன்வந்து கமலிடம் போன் செய்த தனது படத்தை தயாரிக்குமாறு கூறியுள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த ஜெயம்ரவிக்கு சமீபகாலமாக ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

இப்படியே போனால் தனது மார்க்கெட் இழந்து விடும் என்பதால் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜெயம் ரவி உள்ளார். இதனால் ஜெயம் ரவி, கமலிடம் பேசி தனக்கு ஒரு வெற்றிப்படம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.