ஒரே வார்த்தையில் யுவனை பற்றி சொன்ன பிரபல இயக்குனர்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்

இளையராஜாவின் இசை வாரிசான யுவன் சங்கர் ராஜா ஏராளமான தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருடைய மெலோடி பாட்டு என்று ஏகோபித்த ரசிகர்கள் உள்ளனர். அதுவும் அஜித்தின் படங்களில் இவருடைய இசை பலராலும் கவரப்படுகிறது. பெரும்பாலும் வெங்கட்பிரபுவின் படங்களில் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருப்பார்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா சினிமா துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சினிமா துறையை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதில் இயக்குனர் செல்வராகவனும் கலந்து கொண்டார். செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற மறக்க முடியாத படங்களில் பணியாற்றியவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. இந்நிலையில் மேடையில் யுவன் சங்கர் ராஜாவை பற்றி செல்வராகவன் புகழ்ந்து பேசினார்.

அதாவது யுவன் சங்கர் ராஜா என்றைக்குமே உணர்ச்சிவசப்பட்டுடோ, சோகமாக இருந்தோ நான் பார்த்ததே கிடையாது. எப்பேர்பட்ட சூழலாக இருந்தாலும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். அவரைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நண்பேண்டா என்று செல்வராகவன் கூறினார்.

மேலும், ஒரு படம் எடுப்பதில் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது யாரும் அந்த படத்திற்கு இசையமைத்து தர மாட்டார்கள். ஆனால் யுவனிடம் கேட்டால், கொஞ்சமும் யோசிக்காமல் உடனே சரி என்று அந்த படத்தின் பாடல்களை அருமையாக கொடுப்பார் என செல்வராகவன் யுவனுக்கு புகழாரம் கொடுத்தார்.

மேலும் அந்த விழாவில் புதுப்பேட்டை படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா வாசித்தார். அதைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பினர். இதைப்பார்த்த செல்வராகவன் கண் கலங்கி போனார். மேலும் தற்போது தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாகிவரும் நானே வருவேன் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Next Story

- Advertisement -