fbpx
Connect with us

Cinemapettai

செருப்பால அடிப்பேன் என சூப்பர் ஸ்டாரை மிரட்டிய பிரபல இயக்குனர்.. காரணம் இதுதான்?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செருப்பால அடிப்பேன் என சூப்பர் ஸ்டாரை மிரட்டிய பிரபல இயக்குனர்.. காரணம் இதுதான்?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முயன்றால் எவரும் முன்னுக்கு வரலாம் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக மாறியிருக்கிறார்.

அதற்கு முதன் முதலில் வித்திட்டவர் இயக்குநர் கே பாலச்சந்தர். அபூர்வ ராகங்கள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்து அசத்தினார். தொடர்ந்து பில்லா, படிக்காதவன், முரட்டுக்காளை போன்ற அதிரடி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதிலும் அவரது ஸ்டைல் அன்றைய இளைஞர்களிடம் தொற்றிக்கொண்டது.

இந்நிலையில் கே பாலச்சந்தர் தன்னை ஒரு முறை பேச அழைத்ததாகவும், அப்போது குடித்துக் கொண்டிருந்ததால் அது வெளியில் தெரியாமல் இருக்க ஸ்பிரே அடித்துக் கொண்டு சென்றதாகவும் பிரபல பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதை கண்டுபிடித்த பாலச்சந்தர், தனக்கு பிரபல நடிகர் நாகேஷ் வைத்து அறிவுரை கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, நாகேஷ் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா, அவனுக்கு முன்னாடி உன்னோட நடிப்பு ஒரு மண்ணும் இல்ல என்று திட்டினாராம். உன்னை மக்கள் நம்புகிறார்கள், அதுமட்டுமல்லாமல் இனி குடித்து விட்டு வந்தால் செருப்பால் அடித்து விடுவேன் என திட்டியதால் குடியை விட்டு விட்டேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அன்றைக்கு குடியை விட்டதுதான், இன்றுவரை அதை தொட்டுக்கூட பார்த்ததில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாலச்சந்தர் என்னுடைய குருநாதர்,நலம் விரும்பி எனவும் பெருமிதப்படுத்தினார்.

Continue Reading
To Top