கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற நடிகை.. ஆனாலும் 9 தோல்வி படங்கள், நடுத்தெருவுக்கு வரும் தயாரிப்பாளர்கள்

சமூக வலைத்தளங்களில் தேவையற்ற சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகளை பதிவிட்டு, இவரை ட்விடர் நிறுவனமே முடக்கிய நிலையில், அரசியல்வாதிகளின் பகைமை மற்றும் பாலிவுட்டிலும் ஏகப்பட்டவர்களின் பகைமையை வளர்த்துக் கொண்டவர்தான் இந்த நடிகை. இவர் தன்னுடைய 35வது வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் அவ்வபோது கிருத்திக் ரோஷனுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

இப்படி சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் ஏகப்பட்ட விமர்சனங்களை பெரும் இவர், நடிக்கும் ஒவ்வொரு படமும் சமீபகாலமாகவே படுதோல்வியை சந்தித்து அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. கடைசியாக நடித்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது இவர் செய்த அலப்பறை கொஞ்சநஞ்சமல்ல.

இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் பிளாக் விடோவுக்கு சமமான கதாபாத்திரம் என்றெல்லாம் அளந்துவிட்டார். இதனால் ரசிகர்களிடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலீஸான படத்தை குறித்த அதிக ஆர்வம் இருந்த நிலையில், அந்த படத்தை பார்த்த பிறகு இவருடைய ஃப்ளாப் படங்களின் லிஸ்டில் சேர்க்கப்பட்டு சுமார் 70 கோடி நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது.

இவருடைய நடிப்பில் தான் பிரச்சனையா அல்லது இவருடைய படத்தை வேணுமென்றே ஓடவிடாமல் செய்கிறார்களா என்பது தெரியாமல் இவரை நம்பி கோடிக்கணக்கில் படம் போட்ட தயாரிப்பாளர்கள் நடுரோட்டுக்கு வரும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஆகையால் இந்தப் படத்திற்கு பிறகு நிச்சயம் இவருக்கு மார்க்கெட் சுத்தமாக இல்லாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்படியும் இவர் ஒவ்வொரு படத்தின் தோல்விக்குப் பிறகு அவர் அடுத்த படத்திற்காக மீண்டும் கவர்ச்சி புயலாக மாறி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் படு ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து விடுவார்.

எப்படிப் பார்த்தாலும் இவருடைய நடிப்பில் வெளியான இந்த கடைசி படம் முதல் நாளில் வெறும் 50 லட்சம் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றதால், இவரை வைத்து அடுத்த படத்தை எடுப்பதைப் பற்றி தயாரிப்பாளர்கள் நிச்சயம் யோசிப்பார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்