Connect with us
Cinemapettai

Cinemapettai

rajinikanth

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ.. ரஜினிகாந்திற்கு முத்தம் கொடுத்த பிரபல நடிகையின் புகைப்படம்!

71-வது வயதிலும் கதாநாயகனாக தன்னுடைய தனித்துவமான ஸ்டைல், சுறுசுறுப்பான நடை, திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்றும் ரசிகர்களிடம் சூப்பர்ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படத்தையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்கில் விழாக்கோலம் போல் கொண்டாடுகின்றனர்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தின் கதை பிரமாண்டமாக இல்லை என்றாலும், இதில் ரஜினி நடித்த ஒரே காரணத்திற்காக நல்ல வசூல் கிடைத்தது. இதனைப் புரிந்து கொண்ட ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் அதிக கவனம் செலுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் தன்னுடைய அடுத்த படமான தளபதி 169 படத்தில் ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்கிறார்.

இந்நிலையில் சன் டிவி சீரியல் நடிகை ஒருவர் ரஜினிகாந்த்துக்கு கன்னத்தில் இறுக்கி பிடித்து முத்தம் கொடுத்து இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. அதாவது எப்போதுமே டிஆர்பி-யில் முதலிடத்தை பிடிக்கும் சன் டிவியில் கயல் சீரியலின் கதாநாயகி சைத்ரா ரெட்டி என்பவர்தான் ரஜினிகாந்தை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கிறார்.

சைத்ரா ரெட்டி கயல் சீரியலில் மட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலிலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்திருப்பார். அத்துடன் அஜித்தின் வலிமை படத்திலும் சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தை பார்த்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தின் படப்பிடிப்பு தளம் போல் தெரிகிறது. அப்போது படப்பிடிப்பில் கலந்துகொண்ட சைத்ரா ரெட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை என்பதால் அவரை பார்த்ததும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக முத்தம் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் தன் மகளாக நினைத்து அவர் கொடுக்கும் முத்தத்தை வாங்கிக் கொண்டார் என பலரும் கூறி வருகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இதுவரை வெளிவராத நிலையில், தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.

rajini-serial-actress- cinemapettai.jpg

rajini-serial-actress-chaitrareddy- cinemapettai

Continue Reading
To Top