Connect with us
Cinemapettai

Cinemapettai

ajithkumar-ak61

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரபலம்.. கூப்பிட்டு கொடுத்த அல்வா

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தைப் பற்றி தான் ஊடகங்களில் பேச்சாக கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் வலிமை படம் பற்றிய புது புது தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வரிசையில் இந்த படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தில் முதலில் யோகி பாபு நடிப்பதாக இருந்தது. இதற்காக அவருடைய கால்ஷீட்டும் பெறப்பட்டது. ஆனால் படத்தில் அவர் நடித்த மாதிரி தெரியவில்லை.

உண்மையில் அவர் படத்தில் நடித்தாரா என்பது அனைவருக்கும் சந்தேகமாக இருக்கிறது. இல்லை அவர் படத்தில் நடித்து பின்னர் படத்தின் நீளம் காரணமாக அவரது போர்ஷனை வெட்டி எடுத்து விட்டார்களா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் படத்தில் விஜய் டிவியின் புகழ் நடித்த காட்சிகள் மட்டும் இடம் பெற்றிருக்கிறது. யோகி பாபு எப்பொழுதும் அஜித்துடன் நடிக்க பெரிதும் விரும்புவார். ஏற்கனவே அவர் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார் அதனால் அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருந்துள்ளார்.

ஆனால் இடையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. படத்தில் யோகி பாபு வருவார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு காட்சியில் கூட அவரை காண முடியவில்லை. இதனால் படக்குழுவினருடன் அவருக்கு ஏதேனும் பிரச்சனையா என்று பலரும் யோசித்து வருகின்றனர்.

அப்படி பிரச்சனை எதுவும் இருந்திருந்தால் வினோத்தின் அடுத்த படத்தில் யோகி பாபு கமிட்டாகி இருக்க மாட்டார். இதை வைத்து பார்க்கும்போது அவர்களுக்குள் பிரச்சினை எதுவுமில்லை ஆனால் வேறு எதுவும் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் அஜித் படத்தில் நடிக்க ஆசையாக காத்திருந்த யோகிபாபுவுக்கு படக்குழு அல்வா கொடுத்து விட்டனர் என்று அவர் வலிமை திரைப்படத்தில் இல்லாதது குறித்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்

Continue Reading
To Top