செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அதென்னப்பா Schadenfreude, தனுஷை ஜெர்மன் வார்த்தையில் திட்டிய நயன்.. அர்த்தம் இதுதான் மக்களே!

Dhanush: ஆங்காங்கே சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நல்லா இருந்த இரண்டு நண்பர்கள் சண்டை போட்டுக் கொள்வது இன்னும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

நடிகர் தனுஷும் நயன்தாராவும் தான் அந்த நண்பர்கள். அடிக்கும் போது யாரடி நீ மோகினி என்ற படத்தின் மூலம் மீண்டும் அவரை ட்ரெண்டாக்கியவர் தனுஷ். சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி இருந்த நயன்தாரா தனுசுக்காக எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.

மேலும் தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படம் நயன்தாராவை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ஆனால் இந்த படம் இவர்களுடைய நட்பு பிரிவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. நயன்தாராவின் கல்யாண சம்பந்தப்பட்ட டாகுமென்டரி வீடியோவில் நானும் ரவுடிதான் சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் இடம்பெறக் கூடாது என தயாரிப்பாளராக தனுஷ் உறுதியாக இருக்கிறார்.

அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு மூன்று செகண்ட் வீடியோ நயன்தாரா the fairy tale டாக்குமென்ட்ரி வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. அதுவும் நானும் ரவுடிதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பேசிக் கொண்டிருக்கும் வீடியோ.

உடனே தனுஷ் அந்த மூன்று செகண்ட் வீடியோவை 24 மணி நேரத்தில் நீக்காவிட்டால் பத்து லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தனுஷ் தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் சென்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பக்கம் பக்கமாக லெட்டர் எழுது தனுஷ் செய்த விஷயத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

அத்தோடு மட்டுமில்லாமல் நயன்தாரா அந்த லெட்டரில் Schadenfreude என்ற ஜெர்மன் வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கிறார். இப்போது இந்த லெட்டர் விவகாரம் எல்லாம் போய் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு பலருக்கும் சந்தேகம் வரும். அந்த வார்த்தைக்கு அர்த்தம் அடுத்தவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது.

தன்னுடைய போட்டியாளர்களின் தோல்வியை கண்டு ஒருவித சந்தோஷம் கொள்வது என்ற அர்த்தமாம். இதிலிருந்து நயன்தாரா மற்றும் தனுஷுக்கு ஒரு சில வருடங்களாக பெரிய பஞ்சாயத்து போய்க் கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது.

- Advertisement -

Trending News