Connect with us

Cinemapettai

பூதாகரமாக எழும்பிய 2ஜி வழக்கு.. மீண்டும் சிக்கலில் எம்.பி.கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர்.. கதிகலங்கி திமுக! 

stalin-dmk

Tamil Nadu | தமிழ் நாடு

பூதாகரமாக எழும்பிய 2ஜி வழக்கு.. மீண்டும் சிக்கலில் எம்.பி.கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர்.. கதிகலங்கி திமுக! 

2ஜி வழக்கில் ரூ.200 கோடியை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த திமுக கட்சியின் எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரிக்கவே கடந்த 2011ம் ஆண்டு தனியாக சிபிஐ நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இதில், திமுக கட்சியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றச்சதி, மோசடி, ஏமாற்றும், போலியான ஆவணங்களை தயாரித்தல், உள்ளிட்ட பல பிரிவுகளின் வழக்கு தொடுக்கப்பட்டு 6 ஆண்டுகளாக விசாரணை  நடந்து வந்தது.

அதன்பின் கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆவணத்தையும் சிபிஐ சமர்ப்பிக்காதத்தால் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17  பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்த சிபிஐ அமலாக்கத் துறை, விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி வரும் நவம்பர் மாதத்தில் ஓய்வு பெறுவதால் அதற்குள் வழக்கை முடித்து விடவேண்டும்  என மனு அளிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த மனுவை ஏற்ற நீதிபதி இன்று முதல் விசாரணையை துரிதப்படுத்த  வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு ‘எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல’ ஏற்கனவே திமுக கட்சி மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருக்கிற இந்த சூழ்நிலையில் மீண்டும் 2ஜி வழக்கு பூதாகரமாக கிளம்பி இருப்பது,  திமுக கட்சியின் கதி அதோகதி ஆக மாறிடுச்சு.

‘உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்’ செஞ்ச தப்புக்கு தண்டனை கண்டிப்பா கிடைப்பது உறுதி என்ற எண்ண ஓட்டத்தில் மக்களும் இந்த வழக்கின் போக்கை உன்னிப்பாக  கவனித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Nadu | தமிழ் நாடு

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top