Nelson Dilipkumar: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் எதிர்பாராத விதமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வந்தனர்.
இந்த சூழலில் இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இப்போது உள்ள காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் இயக்குனர்களின் ஒருவர் நெல்சன்.
அவர் கடைசியாக இயக்கிய ஜெயிலர் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினிக்கு ஒரு மாஸ் ஹிட் கொடுத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நெல்சன் இயக்க உள்ளார். இந்த சூழலில் நெல்சனின் மனைவி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வரவளையத்திற்குள் வர காரணம் என்னவென்று வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய இயக்குனர் நெல்சன் மனைவி
அதாவது ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு பழிவாங்கும் நோக்கில் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தகவல் வெளியானது. இந்த கொலைக்கு முக்கிய காரணமான ரவுடி சம்போ செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆனால் அவர் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணாவை விசாரிக்க போலீசார் முடிவெடுத்தனர். அவரும் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில் அவருக்கு தனது வீட்டில் நெல்சன் மனைவி அடைக்கலம் கொடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் பெயரில் மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும் தேவைப்பட்டால் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இடமும் போலீசார் விசாரணை நடத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மர்மமாக இருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை
- ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட காரணம் இதுதான்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் மர்ம முடிச்சை அவிழ்த்த அருண் IPS
- சினிமாவை மிஞ்சிய ஆம்ஸ்ட்ராங்கின் கொலை