சரவணன் மீனாட்சி புகழ் நடிகை ரச்சிதாவின் கணவரும், சின்னத்திரையில் பிரபலமான நடிகருமான தினேஷ் தான் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டம் பற்றி ஒரு பேட்டியில்தெரிவித்துள்ளார்.

“நான் எட்டாவது படிக்கும்போது வீட்ல இருந்து சென்னைக்கு ஓடிவந்துட்டேன். `சென்னையில சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜ்ல இருக்கிற ஆர்ட் கேலரியைப் பார்க்கணும், எனக்கு பெர்மிஷன் கொடுங்க’ன்னு வீட்ல கேட்டேன்.

எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கடைசி வரைக்கும் அவங்க விடவே இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து சென்னைக்கு பஸ் பிடுச்சுப் போயிடலாம்னு முடிவுபண்ணேன். ஒருவழியா மதுரைக்கு வந்து சென்னை பஸுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்போ, ஒருத்தன் என்னோட பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டான்.

அதிகம் படித்தவை:  சிம்பு இப்படி ஒரு தியாகத்தை செய்துள்ளார்...! இயக்குனர் உருக்கப்பேட்டி...

நடுராத்திரில என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சுட்டிருந்த நேரத்துல, மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல இருந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்ட நூறு ரூபாய் வாங்கிட்டு ஒருவழியா சென்னை வந்து சேர்ந்தேன்.”

“அந்த நேரம் நடுராத்திரி 12 மணி. வேற வழியில்லாம பீச்ல படுத்துத் தூங்கிட்டு, காலையில எழுந்து பெல்ஸ் ரோடு சிக்னல் வழியா சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜை நோக்கிப் போயிட்டிருந்தேன். அப்போ என்னை ஒரு நூறு போலீஸ் மடக்கிப் பிடிச்சுட்டாங்க.

என்னன்னு பார்த்தா, மறுநாள் காலையில சேப்பாக்கம் ஸ்டேடியத்துல இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கப்போகுது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு `ஹிந்துத்துவ செளராஷ்டிரா’ கட்சியினர், பிட்சில் மண்ணைத் தோண்டி பன்னி தலையை நட்டுவெச்சதுனால ஒரே கலவரம். அந்த ரோட்ல நூறு போலீஸுக்கு மேல பாதுகாப்பு. அதுல ஒரு போலீஸ் என்னைப் பிடிச்சு, `யார் நீ, எதுக்காக இங்கே வந்த?’ன்னு கேட்டார்.

அதிகம் படித்தவை:  தன் கதைக்கு பாதிப்பு வருமா? அஜித்தின் அதிரடி பதிலால் அதிர்ச்சியில் விஷ்ணுவர்தன்

நான் சரியா பதில் சொல்லாததுனால, D-1 போலீஸ் ஸ்டேஷன்ல என்னை உட்காரவெச்சுட்டாங்க. அதுக்கப்புறம், வீட்டுல சொல்லி என்னோட சொந்தக்காரங்க ஸ்டேஷனுக்கு வந்து என்னைக் கூட்டிட்டு போனாங்க,” என கூறியுள்ளார்