சிவாஜி, எம்ஜிஆருக்குள் இவ்வளவு வித்தியாசமா.. வியப்பில் ஆழ்த்திய நடிகர் திலகம்

60, 70 களில் தமிழ் சினிமாவையே ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. அந்தக் காலகட்டத்தில் இவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் எம்ஜிஆர் அரசியலுக்கு சென்ற பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

முழுநேரமும் எம்ஜிஆர் மக்களுக்காக அரசியலில் ஈடுபட்டு வந்தார். ஆனால் சிவாஜி தன்னுடைய இறுதிக் காலம் வரை தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். கடைசியாக படையப்பா படத்தில் ரஜினியின் தந்தையாக சிவாஜி நடித்திருந்தார்.

இந்நிலையில் சிவாஜி தான் ஒப்புக்கொண்ட படத்தில் நடிக்க ஆரம்பித்தால் வேறு எதிலுமே தலையிடமாட்டாராம். அதாவது கதை அல்லது மற்ற கதாபாத்திரங்கள் போன்றவற்றில் தலையிடமாட்டார். தனக்கு கொடுத்த கதாபாத்திரம் மட்டுமே நடித்துவிட்டு மற்றபடி படத்தில் ஒரு மாற்றத்தையும் செய்யாமல் நடித்துக் கொடுத்துவிடுவாராம்.

மேலும் சிவாஜி அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களுக்கு நிஜமா, நடிப்பா என்று தெரியாத அளவுக்கு வியப்பில் ஆழ்த்துவார். இதனால்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற பெயர் அவருக்கு நீடித்தது. மேலும் இன்றுவரை அவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.

எம்ஜிஆர் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்தால் கதையில் சில மாற்றங்கள் வேண்டுமென்றால் அதை வெளிப்படையாக சொல்வாராம். பெரிய நடிகர் என்பதால் இயக்குனர்களும் அதற்கு ஒப்புக் கொள்வார்களாம். சில நேரங்களில் எம்ஜிஆருக்காக முழு படத்தையும் மாற்றி விடுவார்களாம்.

மேலும், எம்ஜிஆர் சொன்ன சில மாற்றங்களால் படங்கள் மிகப்பெரிய வெற்றியும் அடைந்துள்ளதாம். சிவாஜி தனக்கு கொடுத்ததை திறம்பட செய்யக்கூடியவர் என்றால் எம்ஜிஆர் தனக்கு ஏற்றாற்போல் கதையை மாற்றி வெற்றி காண்பாராம். இவ்வாறு இந்த இரு நடிகர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்