பாக்யாவிற்காக ராதிகா எடுத்த அதிரடி முடிவு.. பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்பட்ட திருப்பம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில்  எந்தத் தப்பும் செய்யாத பாக்யாவிற்கு தற்போது கோபி தண்டனை கொடுத்துடன் அளவுக்கு அதிகமாக திட்டித் தீர்க்கின்றான்.

இதையெல்லாம் ராதிகாவிடம் பாக்யா சொன்ன உடனே, தன்னால்தான் பாக்யாவிற்கு இந்த நிலைமை என்பதால் பாக்யாவின் கணவரிடம் பேசும்  முடிவை ராதிகா எடுத்திருக்கிறார்.

இதை கோபி இடமும் ராதிகா தெரிவித்து, தன்னுடன் பாக்யாவின் கணவரை சந்திக்க வருமாறு அழைக்கிறாள். பாக்யாவின் கணவர் கோபி என்பது தெரியாத ராதிகா, கோபி இடமே  இப்படிக் கேட்பது அவனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதனால், தானே பாக்யாவின் கணவரை சந்தித்து மீண்டும் பாக்யாவை பிஸினஸ் தொடங்க வைக்க போய் பேசி வருவதாக சொல்கிறான். அதன் பிறகு வீட்டிற்கு வரும் கோபி பாக்யாவிடம் மறுபடியும் நீ பிஸ்னஸ் தொடங்கலாம் என  கூறுகிறான்.

இதைக்கேட்ட குடும்பத்தினர் பலரும்  ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் நேற்று தான் கோபி பாக்யாவை எந்த பிசினஸ் செய்யவே கூடாது என்று கண்டிப்பாக சொன்ன நிலையில், இந்த திடீர் மாற்றம் எதனால் வந்தது என குழம்பினார்.

இவ்வாறு ராதிகா ஆட்டிவைக்கும் கைப்பாவையாக மாறிய கோபி, இனி வரும் நாட்களில் ராதிகாவிற்காகவே தன்னுடைய குடும்பத்தை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்.

Next Story

- Advertisement -