புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கார், கையில் வெறும் 60 ரூபாய்.. கமலை பிரிந்த அந்த நாள், வீட்டை விட்டு விரட்டப்பட்டாரா சரிகா?

Kamal Haasan: உலக சினிமாவின் என்சைக்ளோபீடியாவாக இருக்கும் நடிகர் கமலஹாசனுக்கு சொந்த வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை. பரதநாட்டிய கலைஞர் வாணியுடன் திருமணமாகி பின்னர் விவாகரத்தில் முடிந்தது.

அதன் பின்னர் இந்தி நடிகை சரிகாவை திருமணம் செய்து 16 வருடம் வாழ்ந்த பிறகு அந்த உறவும் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் கௌதமியுடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்த நிலையில் கௌதமியும் அவரை விட்டு பிரிந்தார்.

இது மட்டும் இல்லாமல் அவ்வப்போது சில இளம் நடிகைகளுடனும் கமல் கிசுகிசுக்கப்படுவது உண்டு. திருமண வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தன்னுடைய இரு மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் உடன் நல்ல உறவில் இருந்து வருகிறார் கமல்.

இந்தி நடிகை சரிகாவை கமல் ரொம்ப உருகி உருகி காதல் செய்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆவதற்கு முன்பே கர்ப்பம் தரித்து விட்டார் சரிகா. அதன் பின்னர் இந்த ஜோடிக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் திருமணம் செய்து வைத்தது.

கமலை பிரிந்த அந்த நாள்

கமலஹாசன் உடனான விவாகரத்திற்கு பிறகு மீண்டும் மும்பையில் தன் இரு பெண் பிள்ளைகளுடன் செட்டில் ஆனார் சரிகா. அதன் பின்னர் பொதுவெளியில் கமலஹாசனை பற்றி சரிகா எந்த ஒரு சூழ்நிலையிலும் பேசியதே கிடையாது.

இருந்தாலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தன்னுடைய விவாகரத்து பற்றி அவர் பேசிய விஷயம் தற்போது வைரலாகி இருக்கிறது. அதில் கமலை விட்டு பிரிய வேண்டும் என்று நான் முடிவு எடுத்ததை ரொம்ப தைரியமான விஷயமாக நினைக்கிறேன்.

இந்த முடிவை எனக்காக மட்டும் இல்லாமல் என்னுடைய அம்மாவுக்காகவும் எடுக்கப்பட்டது. விவாகரத்து என்பது ஒரே இரவில் எடுத்த முடிவல்ல. பல நாட்கள் யோசித்து எடுத்த முடிவு தான். கமலஹாசனின் வீட்டை விட்டு வெளியேறும் போது என்னிடம் என்னுடைய சொந்த கார் மற்றும் கையில் 60 ரூபாய் மட்டும் தான் இருந்தது.

வீட்டை விட்டு என் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வெளியேறிய நான் நண்பர்களின் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு ஆடையை மாற்றினேன். அதன் பின்னர் ரோட்டோரம் காரை நிறுத்திவிட்டு அந்த காரிலேயே உறங்கினேன் என்று சொல்லி இருக்கிறார்.

தற்போது இந்த விஷயம் வெளியானதிலிருந்து இணையவாசிகள் பலரும் ஏன் சரிகா இப்படி ஒரு சூழ்நிலையில் அந்த வீட்டை விட்டு வெளியேறினார், ஒருவேளை கமல் அவரை வீட்டை விட்டு விரட்டினார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர்கள் விவாகரத்து வாங்குவதற்கு முன்பே ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் சரிகா எந்த ஒரு நிலைமையிலும் தன்னை யாரும் அனுதாபமாக பார்க்க கூடாது, உதவி செய்யக்கூடாது என்பதில் ரொம்பவும் உறுதியாக இருப்பவர் என சொல்லி இருக்கிறார். ஒருவேளை இதனால் கூட கமல் அவரை கஷ்டப்படுத்தக் கூடாது என ஒதுங்கி இருக்கலாம்.

- Advertisement -

Trending News