ரோபோ சங்கர் இன்று சினிமாவில் சாதித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர். காமெடி, நடனம், நடிப்பு என கலக்கி வருகிறார்.

காமெடி நிகழ்ச்சியில் தன் திறமையை காட்டி வந்த இவர் இன்று ஒரு தனி நட்சத்திரமாக திகழ்கிறார். சிறுவயதில் காலை 6 மணிக்கு எழுந்து மூட்டை சுமந்து, பெட்டி தூக்கி, கருப்புச்சாறு சுற்றுதல் என மிகவும் கஷ்டப்பட்டதாக கூறியிருந்தார்.

மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் போது வெறும் 100 ரூபாயை சட்டை பையில் வைத்து கொண்டு லாரியை பிடித்து எப்படியோ வந்து சேர்ந்தாராம்.

பின் அவருக்கு பாண்டியராஜன் தான் உதவி செய்தி வழிகாட்டியுள்ளார். இவரை உருவாக்கிய சேனல் அவருக்கு Pride Of The Channel என்ற விருதை வழங்கி சிறப்பித்தது.

விருது ஷங்கருக்கு என அறிவிக்கும் போதே அவரது மனைவி பிரியங்கா கண்கலங்கி விட்டார். அவரது மகளும் அழுதுகொண்டே இருந்தார்.