மாமியாருடன் சேர்ந்து துணிச்சலான முடிவெடுத்த மருமகள்.. ராதிகாவுக்கு புதுப்பொண்ணு கலை வந்துடுச்சு!

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு கேட்டரிங் தொழிலில் ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் பாக்யாவிற்கு பெரிய திருமண ஆர்டர் கிடைத்திருப்பதால், பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார். இதற்கு மருமகள் ஜெனி பாக்யாவிற்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும், அவர் மீண்டும் வேலைக்கு செல்வதாகவும் முடிவெடுத்திருக்கிறார்.

குடும்ப பாரத்தை கொஞ்சம் குறைப்பதற்காக ஜெனி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். தற்போது பாக்யா வெற்றி கிடைத்திருக்கும் துணிச்சலாக தனி ஒரு ஆளாய் சமாளித்து, தனக்கென ஒரு மதிப்பு வருவதற்காகவே இந்த கேட்டரிங் ஆர்டரை நல்லபடியாக செய்து முடித்து வெற்றியின் ருசியை அனுபவிக்க பாக்யா வெறியுடன் காத்திருக்கிறார்.

Also Read: காளியாத்தாவாக மாறிய கண்ணம்மா.. மானத்தைக் சூறையாடும் அவலம்!

ஆனால் இந்த ஆடர் கோபி-ராதிகா இருவரின் திருமணத்திற்காக சமைத்துக் கொடுக்கும் காண்ட்ராக்ட் என்பது இனி தெரிந்தால் பாக்யா தனக்கு வந்த பெரிய சோதனையாகவே அதைப் பார்ப்பார். இருப்பினும் கோபியின் திருமணம் தானே என அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னை விட்டு சென்றவர் எப்படி இருந்தால் நமக்கென்ன என்று பாக்யா மிகவும் துணிச்சலாக அந்த ஆர்டரை சிறப்பாக செய்து கொடுக்கப் போகிறார்.

மறுபுறம் கோபியின் திருமணத்திற்காக கல்யாண பத்திரிக்கை, புது துணி மணி வாங்குவது என்று கல்யாண வேலைகள் தடபுடலாக நடைபெறுகிறது. இதற்கிடையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் அப்பன் கோபி, மகள் இனியாவிற்கும் புதுத்துணி எடுத்து தர வேண்டும் என நினைக்கிறார்.

Also Read: தமிழில் தான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறேன்.. உண்மையைப் புட்டுப் புட்டு வைத்த மலையாள நடிகை

இதற்கு ராதிகாவும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அப்போது ராதிகாவின் அம்மா மட்டும் ராதிகாவை தனியே அழைத்து ‘கோபியை பாக்யா குடும்பத்துடன் ஒட்ட விடாதே! உன்னுடைய கைக்குள் போட்டுக் கொள்’ என ராதிகாவை கொஞ்சம் கொஞ்சமாக பாக்யா குடும்பத்திற்கு எதிராகத் திருப்பிவிட பார்க்கிறார்.

இனிமேல் கோபி 25 வருடங்களாக பாக்யாவிற்காக உழைத்து கொட்டி கொடுத்து விட்டேன். இனி தனக்காக வாழ வேண்டும் என சுயநலவாதியாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ராதிகா மற்றும் அவருடைய மகளுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ போகின்றனர்.

Also Read: மகனுக்கு முன்னாடியே 2வது திருமண பத்திரிக்கை அடிக்கும் அப்பன்.. கேடுகெட்ட குடும்பமா இருக்குதே

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்