பெரும் தொகைக்கு விலை போன சந்தானத்தின் படம்.

காமெடி நடிகராகத் திரையுலகில் அறிமுகமாகி வெற்றி கண்டு தற்போது நாயக நடிகராக வளர்ந்திருப்பவர் சந்தானம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்திருக்கும் அவர்,

தற்போது சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் இடம்பெறும் கலக்கு மச்சான் பாடல் (அக்டோபர் 05) மாலை இணையத்தில் வெளியானது. இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றது santhanam-real-stunt

‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’ இந்த படத்தில் சந்தானம் ரொம்பவும் பிசியாக உள்ளார் . சேதுராமன் என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்து வருகிறார்.

மேலும், விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம்.நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘VTV புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் VTV கணேஷ் தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்  வெளியிடப்பட்ட ‘கலக்கு மச்சான்’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் வெளிநாட்டு உரிமையை ‘AP இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் – ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை இந்நிறுவனங்களே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கங்களில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. வெகு விரைவில் டீஸர், டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் விரைவில்  வெளியாகுமாம்.

சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பிச்சதில் இருந்து ஹெஸ்ட் ரோல் கூட நடிக்க வரமாட்றாருனு சில தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். சக்க போடு போடு ராஜா படம் திரைக்கு வந்து சக்க போடு போடும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டு  இருக்கிறார்கள்.

(தமிழ்365 Download Best Android app)-https://goo.gl/YYv7Dr

Comments

comments