சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி ஆண்கள் அணி

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சி நல்லா இருக்கோ இல்லையோ, ஆனால் அதை ஒரு நாளும் மிஸ் பண்ணாமல் பார்க்கும் ரசிகர்கள் பலரும் இருக்கிறார்கள். அதனாலேயே ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் அளவிற்கு மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. அந்த வகையில் சீசன் 8 ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 50 நாள் நெருங்கப் போகிறது. இந்த சூழ்நிலையில் கிட்டதட்ட ஐந்து போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரத்துக்கு 13 போட்டியாளர்கள் நாமினேஷன்க்கு வந்திருக்கிறார்கள். அதில் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாராகி விட்டார். இதற்கு இடையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்கள் அணியில் இருந்து ராஜாவாக ரானவ் இருந்தார். இதில் ராணியாக சாச்சனா நடித்திருந்தார்.

அத்துடன் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியில் யார் டாஸ்க் நல்லா விளையாடி ஜெய்க்கிறார்களோ, அவர்களுக்கு அரியணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் பெரும்பாலான டாஸ்க்ல் வெற்றி பெற்று ஆண்கள் அணி அரியணையை கைப்பற்றி விட்டார்கள். பெண்கள் அணி ஒரே ஒரு டாஸ்க் மட்டும் ஜெயித்தார்கள்.

அதனால் ஆண்கள் அன்னிக்கு நாமினேஷன் பாஸ் கிடைத்தது. இதனை வைத்து ஆண் போட்டியாளர்களில் ஒருவரை காப்பாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சிவகுமாரை நாமினேஷன் பாஸ் வைத்து காப்பாற்றி விட்டார்கள். மீதமிருக்கும் போட்டியாளர்களில் முதல் மூன்று இடத்தில் முத்துக்குமார், சௌந்தர்யா, vj விஷால் அதிக ஓட்டுகளில் இருக்கிறார்கள்.

அடுத்தபடியாக ஜாக்லின், ராணவ், அருண், பவித்ரா, ரயான் ஆகியோரும் நடுத்தர ஓட்டுகளை பெற்று கொஞ்சம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் டேஞ்சர் ஜோனில் இருப்பது வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா மற்றும் சிவக்குமார். இதில் ஆண்கள் அணி பக்காவாக காய் நகர்த்தி சிவகுமாரை காப்பாற்றி விட்டார்கள். மீதமிருக்கும் மூன்று போட்டியார்களுமே கம்மியான ஓட்டுகளை பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் முதலில் மக்கள் வெளியே அனுப்ப வேண்டும் என்று நினைப்பது சாச்சனாவை தான். ஏனென்றால் அந்த அளவிற்கு கடுப்பான விஷயங்களை செய்து மக்களை வெறுப்பேற்றி இருக்கிறார். அதனால் இந்த வாரம் கண்ணீரோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது சாச்சனா.

- Advertisement -

Trending News