பிக் பாஸ் வீட்டை விட்டு 84 நாட்களில் வெளியேறிய போட்டியாளர்.. ரொமான்டிக் ஹீரோவாக வாய்ப்பைப் பெற்ற சீரியல் நடிகர்

Serial Actor: எத்தனையோ பேருக்கு திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டுவதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகிறது. ஆனால் இப்ப இருக்கிற காலத்தில் உலகமே நம் கைக்குள் இருக்கிறது என்பதற்கு ஏற்ப திறமைகள் ஒவ்வொன்றையும் வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பிரபலமாகி விடுகிறார்கள். இந்த பிரபலத்தின் மூலம் மீடியாவிலும் நுழைந்து விடலாம் என்று பலரும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி பெற்று வருகிறார்கள்.

இந்த லிஸ்டில் தான் சீரியல் நடிகர் ஒருவர் ஆரம்பத்தில் சில வீடியோக்களை போட்டு பிரபலமாகி அதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படி சீரியலின் நடிக்கும் வாய்ப்பை பெற்றதும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதன் மூலம் புகழை சம்பாதித்து விட்டு தற்போது ஹீரோவாகவும் அடி எடுத்து வைக்கப் போகிறார்.

அவர் வேறு யாருமில்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்த சரவணன் விக்ரம் தான். இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் விதமாக பிக் பாஸ் 7 சீசனில் பங்கு பெற்றார். இதில் கிட்டத்தட்ட 84 நாட்களில் வீட்டுக்குள் இருந்து விளையாடினார். ஆனால் ஒரு சில காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன் விக்ரமுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்கள்.

அதன் மூலம் தற்போது ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் சரவணன் விக்ரம், டியர் ரதி என்ற படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடிப்பதற்கு கம்மிட் ஆயிருக்கிறார். இதற்கான போஸ்டர் வெளியான நிலையில் சரவணன் விக்ரம் அதை அவருடைய இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். பிக் பாஸ் பொறுத்த வரை கப்பு யாரு பெறுகிறார்களோ அவர்கள் பெருசாக சாதித்ததாக இல்லை.

saravanan
saravanan

பாதியில் திரும்பிப் போனவர்களுக்கு தான் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வெற்றியை தக்கவைத்து வருகிறார்கள். இந்த லிஸ்டில் தர்ஷன், கவின், ஹரிஷ் கல்யாண் இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து சரவணன் விக்ரமுக்கும் தற்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது. அத்துடன் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலிடம் போகும் பொழுது உங்களுடைய படத்தில் எனக்கு நடிக்கும் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் போதும் என அவருடைய ஏக்கத்தை வெளிப்படுத்திட்டு போனார்.

அதனால் தற்போது ஹீரோவாகியிருக்கும் சரவணன் விக்ரம் அடுத்து கமல் படத்திலும் எப்படியாவது நடிக்கும் வாய்ப்பை பெற்றிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய அடுத்த அடுத்த வெற்றிக்கு ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment