புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிக் பாஸில் இந்த வாரம் உறுதியாக வெளியேறப் போகும் போட்டியாளர்.. அசீம மட்டம் தட்டி பேசின உன்னை தட்டி அனுப்பிட்டாங்க

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சற்று ரசிகர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது. கிட்டத்தட்ட பத்து வாரங்கள் கடந்த நிலையிலும் தற்போதும் சுறுசுறுப்பாக இல்லாமல் மந்தமாக தான் சென்று கொண்டிருக்கிறது.

இப்போது இந்த வாரம் யார் எலிமினேட் ஆக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறினர். மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் என்பதால் நந்தினி நாமினேட் ஆகவில்லை. விக்ரமன், அசீம், ரக்ஷிதா, மணிகண்டன், ஏடிகே, ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

Also Read : டிஆர்பி-யில் விஜய் டிவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பிரபல சீரியல் பிரபலம் உயிரிழப்பு

இதில் அசீம் மற்றும் விக்ரமன் பைனலிஸ்ட் போட்டியாளர்கள் என்பது ரசிகர்களின் ஆதரவை வைத்து தெரிகிறது. ஆகையால் எல்லா வாரமும் இவர்கள் நாமினேட் ஆனாலும் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து தற்போது தனலட்சுமிக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

மேலும் மணிகண்டன், ஏடிகே, ஜனனி மற்றும் ரக்ஷிதா ஆகியோர் தான் டேஞ்சர் சோனில் உள்ளனர். இதில் ரக்ஷிதாவுக்கு தனது சீரியல் மூலம் உள்ள ரசிகர்களால் அவரும் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். ஜனனியின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றாலும் சில வாக்குகள் பெற்ற அவரும் இந்த வாரம் தப்பித்துள்ளார்.

Also Read : பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறும் கல்லுளிமங்கன்.. அசிமிக்கு இவ்வளவா? அதிர்ச்சியை கிளப்பிய ஓட்டிங் லிஸ்ட்

மீதமுள்ள போட்டியாளர்களான மணிகண்டன் மற்றும் ஏடிகே இவர்களுள் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார். அந்த வகையில் இந்த வாரம் மயிரிழையில் மணிகண்டன் தப்பித்துள்ளார். மணிகண்டனை விட கிட்டத்தட்ட நூறு வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று ஏடிகே வெளியேறுகிறார்.

இலங்கையைச் சேர்ந்த ஏடிகே அவ்வப்போது நல்ல கருத்துக்களை, நியாயத்தின் பக்கமும் நின்றுள்ளார். ஆனால் சில வாரங்களாக தேவையில்லாத சண்டையில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி சில சமயங்களில் அசீமை மட்டும் தட்டி பேசுவதால் ரசிகர்களின் எதிர்ப்பை சந்தித்து உள்ளதால் குறைவான வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

Also Read : 10 வாரமும் நாமினேஷன் லிஸ்டில் வராத போட்டியாளர்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே சாதனை படைத்த அதிர்ஷ்டசாலி

- Advertisement -

Trending News