ஆச்சரியமூட்டும் விகடன் விருதுகளின் மொத்த லிஸ்ட்.. தொடர்ந்து 2 முறை வாங்கிய தனுஷை பின்னுக்குத் தள்ளிய நடிப்பு அரக்கன்

திரைப்படங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு வருடம் தோறும் அவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கி கௌரவிப்பார்கள். அந்த வகையில் இந்த முறை சிறந்த நடிகர் நடிகைகளுக்கான விருதினை ஒரே படத்தை சேர்ந்த நடிகர் நடிகைகள் தட்டி தூக்கி ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதில் கடந்த இரண்டு முறை தொடர்ந்து ஆனந்த விகடன் வழங்கும் விருதினை தட்டி சென்ற தனுஷை பின்னுக்கு தள்ளி தற்போது நடிப்பு அரக்கனாக ரசிகர்களின் மனதில் குடிகொண்டிருக்கும் சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார்.

Also Read: அந்த ஒரு விஷயத்தில் சூர்யாவை அடிச்சுக்க ஆளே இல்ல.. அடுத்து உடைய போகும் அஜித், விஜய்யின் மார்க்கெட்

இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற இரண்டு படங்களிலும் சிறப்பாக நடித்ததால் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சிறந்த நடிகைக்கான விருதும் ஜெய் பீம் படத்தில் நடித்த லிஜோமோள் ஜோஸ் பெற்றார்.

மேலும் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் ஜெய் பீம் தான் தட்டி தூக்கியது. இப்படி மூன்று விருதுகள் பத்தாது என்று சிறந்த இயக்குனருக்கான விருதையும் ஜெய் பீம் படத்தை இயக்கிய தா.செ. ஞானவேல் பெற்றார். இதைத்தொடர்ந்து சிறந்த நடன இயக்குனருக்கான விருது மாஸ்டர் படத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலின் நடன இயக்குனர் தினேஷ் பெற்றார்.

Also Read: 2022 ஐ அதிர வைத்த 6 சம்பவங்கள்.. வருஷ தொடக்கத்திலே ஷாக் கொடுத்த தனுஷ்

மேலும் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த பசுபதி பெற்றார். இதைத்தொடர்ந்து சிறந்த வசனத்திற்கான விருது கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு கிடைத்தது. சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது சூரரைப்போற்று படத்தில் நடித்த ஊர்வசி பெற்றார்.

அதேபோல் சிறந்த திரைக் கதைக்கான விருது மாநாடு படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபு பெற்றார். அதேபோல் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின்-க்கு கிடைத்தது.

Also Read: உங்க சங்காத்தமே வேண்டாம்.. தேடிவந்த இயக்குனரை துரத்தி விட்ட சூர்யா

மேலும் சிறந்த பின்னணி பாடுகான விருது கர்ணன் படத்தில் இடம் பெற்ற ‘கண்டா வர சொல்லுங்க’ என்ற பாடலை பாடிய கிடாக்குழி மாரியம்மள் பெற்றார். இவ்வாறு ஆனந்த விகடன் சார்பில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட சிறந்த திரை பிரபலங்களுக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் ஆக டாக்டர் படத்திருக்கும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது ரெடின் கிங்ஸ்லிக்கும், சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருது தாமரைக்கும், சிறந்த வில்லனுக்கான விருது மாநாடு படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா-விற்கும், சிறந்த கலை இயக்கத்திற்கான விருது த. ராமலிங்கம் அவர்களுக்கு கர்ணன் மற்றும் சார்பட்டா பரம்பரை படத்திற்காகவும் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிறந்த அறிமுக நடிகருக்கான விருது ஹக்கீம் ஷா அவர்களுக்கும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது மண்டேலா படத்தில் நடித்த முகேஷ் பெற்றார். மேலும் சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது மாஸ்டர் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பெற்றார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது சைக்கோ படத்தின் ஒளிப்பதிவாளர் தன்வீர் மிர் அவர்களுக்கும், சிறந்த பட தொகுப்பாளருக்கான விருது கே.எல். பிரவீன் அவர்களுக்கு மாநாடு படத்தின் மூலம் கிடைத்தது.

சிறந்த கதைக்கான விருது கா/பெ ரணசிங்கம் படத்தின் கதாசிரியர் பெ. விருமாண்டி பெற்றார். சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தேன் படத்தில் நடித்த அபர்ணதி பெற்றார். அதேபோல் சிறந்த ஒப்பனையாளருக்கான விருது சார்பட்டா பரம்பரை படத்தில் பணியாற்றிய தசரதன் பெற்றார். எனவே விருது பெற உள்ள திரை பிரபலங்களுக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்