Tamil Cinema News | சினிமா செய்திகள்
வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கோப்ரா படக்குழு.. எகிறும் எதிர்பார்ப்பு!
சியான் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் தான் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் 12 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய இர்பான்னுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை சொல்லி இருக்கின்றனர் கோப்ரா படக்குழுவினர்.
அதாவது கடந்த 27ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய இர்பான்னுக்கு கோப்ரா படக்குழுவினர் சிறப்பான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் இர்பான் பதான், பிரஞ்சு இன்டர்போல் அதிகாரியாக ‘அஸ்லான் எல்மாஸ்’ என்ற கேரக்டரில் இந்தப் படத்தில் நடிக்கின்றார் என்ற சீக்ரெட்டான தகவலையும் படக்குழுவினர் கூறி, ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளனர்.
எனவே 7 ஸ்கிரீன் சூடியஸ் நிறுவனம், கிரிக்கெட் வீரரை நடிக்க வைத்து தயாரிக்கும் இந்த ‘கோப்ரா’ படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர்.

irfan-pathan-cobra
