திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

பாக்யாவை தவறாக புரிந்து வாய்க்கு வந்தபடி பேசும் பிள்ளைகள்.. ராதிகாவிடம் உண்மையை உளறிய கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எழிலின் பட பூஜை விழாவை முடித்துவிட்டு இனியா, செழியன், ஜெனி மூன்று பேரும் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இனியா, அம்மாக்கு அப்படி என்னதான் வேலையோ, எழில் அண்ணாவின் சந்தோஷத்தில் கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு பிஸியாகி விட்டார் என்று சொல்கிறார்.

உடனே செழியனும், அம்மாக்கு எப்ப பாத்தாலும் ஹோட்டலில் வேலை பார்ப்பது தான் முக்கியம். நம்மளை பற்றி எங்கே யோசிக்கிறாங்க என்று சொல்கிறார். அதற்கேற்ற மாதிரி இனியா, அம்மா ரொம்ப ஓவராக போய்கிட்டு இருக்காங்க. என்னோட காலேஜ்ல கூட எல்லா பங்க்ஷனுக்கும் அம்மா அப்பா இருவரும் சேர்ந்து வந்து பார்க்கிறாங்க. ஆனா எப்ப பாத்தாலும் அம்மா மட்டும் லேட்டா வந்து என்னை கஷ்டப்படுத்துறாங்க என்று சொல்கிறார்.

இப்படி செழியன் மற்றும் இனியா வாய்க்கு வந்தபடி பாக்கியவை தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜெனி, அத்தை வராததற்கு நிச்சயம் வேற காரணம் இருக்கும். எழிலின் முன்னேற்றத்தில் அத்தைக்கு இருக்கும் அளவிற்கு சந்தோஷம் வேற யாருக்கும் கிடையாது. அதனால் வேறு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கும் என்று பாக்கியாவிற்கு ஃபோன் பண்ணி பார்க்கிறார்.

ஆனால் பாக்கியா போன் எடுக்கவில்லை என்றதும் செழியன், இதுதான் சான்ஸ் என்ற அம்மா இன்னைக்கு ஹோட்டலில் ஆயுத பூஜை விஷயமாக ஆர்டர் எடுத்து அதை துவங்குகிறார்கள். அதனால் பிஸியாக இருப்பதால் நம்மளை உதாசீனப் படுத்துகிறார்கள் என்று சொல்கிறார். இனியாவும் சேர்ந்து ஒத்து ஊதி பாக்கியாவை தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள்.

அடுத்ததாக பாக்கியா, ஹோட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு டீ காபி போட்டு அங்கு நடக்கும் வேலைகளை இழுத்து போட்டு பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்த ஈஸ்வரி, பாக்யாவை பெருமையாக பார்த்து நினைக்கிறார். அத்துடன் ஆனந்த் இன்றைக்கு வசமாக மாட்டிக் கொள்ளப்போறார் என்பதற்கு ஏற்ப ஈஸ்வரி வைத்து பாக்யா ஒரு பிளான் போட்டு விட்டார்.

இதற்கிடையில் கோபி, ராதிகாவிடம் எழில் பட விஷயமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது படத்தின் டைட்டிலையும் நான் தயாரிப்பாளரிடம் சொல்லி மாற்றி விடுவேன் என்று சொல்கிறார். உடனே ராதிகா அது எப்படி உங்களால முடியும் என்று கேட்கிறார். எழிலின் தயாரிப்பாளர் என்னுடைய நண்பர் தான். அவரிடம் சொன்னால் அவர் எல்லாமே பார்த்து விடுவார்.

இப்படித்தான் பட பூஜைக்கு ஏழிலின் அம்மா பாக்யா கலந்து கொள்ளக் கூடாது என்று தயாரிப்பாளர் மூலம் பாக்யாவுக்கு செக் வைத்தேன். அதன்படி பாக்கியாவும் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. அப்பொழுது பாக்யா அழுது கொண்டே போகும் பொழுது நான் அதைப் பார்த்து மனசுல ரொம்ப சந்தோஷப்பட்டு துள்ளி குதித்தேன் என்று சொல்கிறார். உடனே ராதிகா, இந்த எல்லா வேலைக்கும் நீங்க தான் காரணமா? ஏன் இப்படி ஒரு சைக்கோ மாதிரி மாறி விட்டீங்க என்று சொல்கிறார்.

ஆனாலும் இந்த கோபி நீ என்ன சொன்னாலும் என் காதில் கேட்காது. ஏனென்றால் நான் பட்ட அவமானங்கள் அப்படி, அதையே நான் பாக்யாவிற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் நீ ஏதாவது சொல்லி என்னை குழப்பி விடாதே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

இந்த விஷயத்தில் கோபி யார் பேச்சையும் கேட்க கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் ஆனந்த் மூலமாக கோபி தான் எல்லா திருட்டு வேலையும் பார்த்திருக்கிறார் என்று பாக்யா கண்டுபிடித்து விட்டார். இதன் பிறகு தான் கோபிக்கு அடி மேல் அடி விழ போகிறது.

- Advertisement -

Trending News