Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

கடைசி நேரத்தில் கோல் தர மறுத்த நடுவர்.. வெறிபிடித்து ரொனால்டோ செய்த வேலையால் உயிர் பிழைத்த குழந்தை

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது ரொனால்டோ கோபமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அந்த கோபத்தால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள நிகழ்வு குறித்து பார்க்கலாம்.

உலக புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று கோடிகளில் புரண்டு வரும் பிரபலமாக வலம் வருகிறார். அண்மையில் துபாயில் நடைபெற்ற FIFA 2022 சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் ரொனால்டோவின் போர்டுகள் நாட்டு அணி தோல்வியுற்ற நிலையில், மைதானத்திலேயே உருண்டு புரண்டு அழுத ரொனால்டோவின் முகத்தை பார்த்த பலருக்கும் கண்ணீர் பெருக்கெடுத்திற்கும்.

அப்படிப்பட்ட ரொனால்டோ 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியின் போது நடுவரின் தீர்ப்பால் கோபப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.அந்த கோபத்தால் ஒரு குழந்தையின் உயிரே கைப்பற்றப்பட்ட நிகழ்வை தான் தற்போது பார்க்கப்போகிறோம். 2021 ஆம் ஆண்டு செர்பியா நாட்டில் உள்ள ராஜ்கோ மெட்டிக் கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டி நடைப்பெற்றது.

Also Read : கால்பந்து விளையாட்டின் அரக்கன் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. புகழின் உச்சத்தை தொட உருவான கதை

அந்த போட்டியில் ரொனால்டோவின் போர்டுகள் அணியும், செர்பியா நாட்டு அணியும் மோதின. 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் 2-2 என்ற சரிசமமான கணக்கில் இருந்த நிலையில், கடைசி வெற்றி கோலினை ரொனால்டோ அடித்தார். ஆனால் அந்த கோலை செர்பியா நாட்டு வீரர் தடுத்த நிலையில், செல்லாது என நடுவர் தெரிவித்தார். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரொனால்டோவை நடுவர் மஞ்சள் அட்டையை காண்பித்து மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனால் செம காண்டான ரொனால்டோ, கோபத்தின் உச்சிக்கு சென்று தன் கையில் அணிந்திருந்த கேப்டன் பேண்டை மைதானத்தில் தூக்கி வீசி சென்றார். இந்த பேண்டை அங்குள்ள தீயணைப்பு வீரர் ஒருவர் எடுத்து வைத்துக்கொண்டு 3 நாட்கள் ஏலம் விட்டுள்ளார். அந்த ஏலத்தில் 75000 டாலர்கள் கிடைத்தது. கிட்டத்தட்ட இந்திய மடிப்பின்படி 60 லட்சம் ரூபாய் ரொனால்டோவின் நீல நிற கேப்டன் பேண்டுக்கு கிடைக்கப்பெற்றது.

Also Read : உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்த போட்டியாளர்.. பல மில்லியன் குழந்தைகளின் வாழ்வாதாரமே இவர்தானாம்

இந்த பணத்தை செர்பியா நாட்டில் முதுகெலும்பு பிரச்னையால் உயிருக்கே பாதிப்படைந்த நிலையில் இருந்த, ஒரு சிறுமியின் மருத்துவ செலவிற்கு வழங்கப்பட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் உலா வந்து பெரும் வைரலானது. அன்று மட்டும் அந்த செல்லாத கோல் உண்மையாகவே இருந்திருந்தால் ரொனால்டோ அவர் கேப்டன் பேண்டை கோபத்தில் தூக்கி வீசியிருக்கமாட்டார்.

இன்று ஒரு குழந்தையின் உயிரும் போயிற்கும். தெரிந்தோ,தெரியாமலோ ரொனால்டோவின் கோபம் மிகப்பெரிய உதவியை செய்துள்ளது தான் பலருக்கும் ஆச்சரியமான ஒன்று. ரொனால்டோ பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கு பின்னாலும் உலகம் முழுதும் உள்ள பல சர்வதேச கம்பெனிகள் அவருக்கு ஸ்பான்சர்ஷிப்பை வாரி வழங்கும். அவர் ஒருமுறை பயன்படுத்திவிட்டால் 1000 கணக்கில் உள்ள பொருளின் மதிப்பு கூட லட்சம்,கோடிகளை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரொனால்டோவை மிஞ்சுய போட்டியாளர்.. மெஸ்ஸியை கதிகலங்க வைத்து 200 கோல்களை அடித்து சாதனை

Continue Reading
To Top