திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

என்ன ஆரம்பிக்கலாமா? எலான் மஸுக்கு போட்டியாக களமிறங்கிய ஸ்டாலினின் மருமகன்

உலகம் முழுவதும் இளைஞர்களுக்குத் தெரிந்த பெயராக இருப்பது எலான் மஸ்க். வணிகத்திலும் விண்வெளியிலும் சாதனை படைத்த அவரைப் போல் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் விண்வெளி ஆய்வுத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

உலகின் டாப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா கார் நிறுவன அதிபாராகவும், டுவிட்டர் அதிகபராகவும் இருப்பதுடன் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸை நடத்தி வருகிறார். உலகின் மிகப்பெரிய தனியார்துறை விண்வெளி ஆய்வு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் அதிக எடையிலான செயற்கைக் கோள்களை த்னது ஃபால்கன் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவி வருகிறார். ஒரு நாடே செய்யத் தயங்கி முதலீடு செய்ய தயங்கும் விண்வெளியில் தனி நபராக துணிந்து முதலீடு செய்து, அதில் சாதனை படைத்திருக்கிறார் எலான் மஸ்க். அதன் மூலம் அமெரிக்காவின் பல செயற்கைக் கோள்களையும் அவர் ஏவி இருக்கிறார். அதேபோல் உலகின் முதல் தனியார் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலினின் மருமகன் தொடங்கிய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம்!

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஒரு விண்வெளி ஆய்வு மையத்தைத் தொடங்கியுள்ளர். விண்வெளி ஆர்வலராகர் இருக்கும் அவர் வானம் என்ற விண்வெளி தொழில் நுட்ப நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அதன்படி, சபரீசரின் சகோதரர் ஹரிஹரன், வேதமூர்த்தி மற்றும் சமீர் ராம் உள்ளிட்டோர் கூட்டமைப்பில் இந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டாலும், இது சபரீசன் தலைமையின் கீழ் இயங்கும் எனத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே அரசியலிலும், வணிகத்திலும் பிஸியாக வலம் வரும் சபரீசன், விண்வெளித்துறையில் புதிதாக கால்பதித்திருப்பது ஆச்சயர்த்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அத்துறையில் மேலும் சாதித்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸுக்குப் போட்டியாக தன் நிறுவனத்தை கொண்டுவருவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழ் நாட்டில் இத்தகைய நிறுவனத்தை தொடங்கிய அவரது முன்னெடுப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

- Advertisement -

Trending News