எதிர்க்கட்சியின் தவறை பட்டியல் போட்டு பிரச்சாரம் செய்த முதல்வர்.. அனல் பறக்கும் அரசியல் களம்!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சியின் தவறுகளை பட்டியலிட்டு கூறியதோடு, அவர்களது பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

அதாவது எடப்பாடியார் ஈரோட்டில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது,  திமுகவினர் ஒரு கடையில் உணவருந்திவிட்டு, சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதற்காக அக்கடையின் உரிமையாளரை திமுகவினர் அடித்த சம்பவத்தை சுட்டிக் காட்டியதோடு, ஸ்டாலின் இந்த தவறை தட்டிக் கேட்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்ததையும் கூறியுள்ளார்.

அதேபோல், அதிமுகவில் இதுபோன்ற தவறு நடந்தால், தவறு செய்தவரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவரை அதிமுக கட்சியில் இருந்து  நீக்கி விடுவோம் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் திமுகவில் இல்லை என்றும் கூறியிருக்கிறார்  எடப்பாடியார். அதோடு எடப்பாடியார், ‘தப்பு செய்றவங்க தான் திமுகவில் பெரிய பதவியில இருக்காங்க’ என்று எதிர்க்கட்சியை விமர்சித்துள்ளார்.

மேலும் திமுக நாடாளுமன்ற தேர்தலின் போதும், இதேபோல்தான் கிராமம் கிராமமாக சென்று கிராமசபை நடத்துவதாக கூறி, மனுக்களை வாங்கினார் என்றும், ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களை  கண்டுக்கவில்லை என்றும் எடப்பாடியார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோல்தான், திமுக பொய், பித்தலாட்டம் போன்றவற்றை செய்து கொல்லைப்புறம் வாயிலாக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது என்று எடப்பாடியார் காட்டசாட்டமாக எதிர்க்கட்சியை  விளாசியுள்ளார்.

அதோடு, திமுகவின் ஊழல்களை பற்றி பட்டியலிட்டு கூற தன்னால் முடியும் என்றும், திமுகவினருக்கு தைரியமிருந்தால் அவற்றை எதிர்த்து கேள்வி கேட்கட்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் எடப்பாடியார்.

எனவே, எதிர்க்கட்சியினரை தமிழக முதல்வர் சொல்லால் விளாசி இருக்கும் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

edappadi-palaniswami
edappadi-palaniswami
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்