Connect with us
Cinemapettai

Cinemapettai

பேரிடர் காலத்திலும் சத்தமில்லாமல் சாதனை புரிந்த தமிழக முதல்வர்.. மகிழ்ச்சியில் திளைக்கும் வேலையில்லா பட்டதாரிகள்!

Tamil Nadu | தமிழ் நாடு

பேரிடர் காலத்திலும் சத்தமில்லாமல் சாதனை புரிந்த தமிழக முதல்வர்.. மகிழ்ச்சியில் திளைக்கும் வேலையில்லா பட்டதாரிகள்!

தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரது நலத் திட்டங்களால் தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புயல், வைரஸ் தொற்று போன்ற பேரிடர்களுக்கு நடுவிலும் தமிழகத்தை தொழில்துறையில் முன்னேற்றி, சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் தமிழக முதல்வர்.

அதாவது கொரனா வைரஸ் தொற்று, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களுக்கு முதன்மை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. ஏனென்றால், இந்த ஆண்டில் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி மதிப்பிலான புத்துணர்வு  ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகி உள்ளனவாம்.

மேலும் கொரனா பேரிடரால் பல நாடுகளும் பொருளாதார ரீதியாக ஆட்டம் கண்ட நிலையில், எதிர்காலத்தை மனதில் கொண்டு எடப்பாடியார் கொரோனா கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த காலத்திலேயே பல  நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்தார். இதனால் இனிவரும் காலங்களில் தமிழகத்தின் பொருளாதாரம் பல மடங்காக அதிகரிக்கும்  என சொல்லப்படுகிறது.

அதோடு, இந்த 2020 நிதியாண்டில் வருடத்தின் முதல் பாதியில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்து முதன்மை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. ஏனென்றால், இந்த காலத்தில் 31, 464 கோடி மதிப்பீட்டில் 42 புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 12ஆம் தேதி 10 ஆயிரத்து 55 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தொழில் திட்டங்களும் தமிழகத்தில்  தொடங்குவதற்கான புத்துணர்வும் ஒப்பந்தங்களும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், டிசம்பர் மாதம் 24,500 கோடி ரூபாய் மதிப்பில் புத்துணர்வு ஒப்பந்தங்களும், 19,995 கோடி ரூபாய் மதிப்பில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புத்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதனால் 26,550 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என  சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் தலைமையில் 4,455 கோடி ரூபாய் மதிப்பில் 5 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட தோடு 27,384 நபர்களுக்கு வேலை வாய்ப்பும்  கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

edappadi

edappadi

எனவே, இவ்வாறு  பேரிடர் காலத்திலும், தமிழக பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இவ்வளவு முதலீடுகளை எடப்பாடி ஈர்த்து இருப்பது இந்திய அளவில் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதால் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top