தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா.?

DMK : தமிழ்நாட்டில் இப்போது திமுக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதில் திமுக சார்பில் 33 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை செயல்பட்டு கொண்டிருக்கிறது. மு க ஸ்டாலின் முதலமைச்சர் பதவியேற்று கடந்த மூன்று வருடங்களை நிறைவு செய்திருக்கிறார்.

இதில் நான்கு முறை அமைச்சரவையை மாற்றம் செய்திருக்கிறார். இந்த சூழலில் வருகின்ற அக்டோபர் மாதம் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. ஆரம்பத்தில் போக்குவரத்து துறையில் இருந்த ராஜ கண்ணப்பாவை நீக்கிவிட்டு சிவசங்கரிடம் அந்த இலாகா கொடுக்கப்பட்டது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அமைச்சரவையில் மு க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டிருந்தார். இவருக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த 2024 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

தமிழக அமைச்சரவையில் ஏற்பட உள்ள மாற்றம்

இவர் நிர்வாகித்து வந்த மின்சார துறை தங்கம் தென்னரசனுக்கு ஒதுக்கப்பட்டது. இப்போது அக்டோபரில் நடக்கவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜிக்கு அவர் வகித்து வந்த மின்சாரத்துறை மீண்டும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதேபோல் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு இரண்டு மூத்த அமைச்சர்களை நீக்கப்பட்ட இளம் அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் கசிந்து இருக்கிறது.

ஏற்கனவே ரஜினி சமீபத்தில் துரைமுருகனை கிண்டல் செய்து மூத்த அமைச்சர்கள் வழி விட வேண்டும் இளையவர்களுக்கு என்று குறிப்பிட்டு இருந்தார். இப்போது அதன் வெளிப்பாடாகத்தான் அமைச்சரவையில் 2 இளம் அமைச்சர்களை நியமிக்க உள்ளனர்.

சூடு பிடிக்கும் அரசியல் களம்

- Advertisement -spot_img

Trending News