Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலில் சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் பெஸ்ட் என்று ஓவராக ஆட்டம் போட்டதற்கு மொத்தமாக பணிவிலும் மலர்வணம் சீரியல் ஆப்பு வைத்து விட்டது. இதுவரை சிறகடிக்கும் ஆசை, டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருந்தாலும் தற்போது கொஞ்ச நாளாக மக்களின் வெறுப்பை சம்பாதித்து யாரும் பார்க்காதபடி கதை டம்மி ஆகிவிட்டது.
அதனால் அடுத்தடுத்து டிஆர்பி ரேட்டிங்கலும் அடிவாங்கி சிறகடிக்கும் ஆசை சீரியலை வெறுக்கும் படியாக ஒதுக்கி விட்டார்கள். ஆனால் அதற்கு பதிலாக பணிவிலும் மலர்வணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வினுஷா தேவி என்கிற அன்புவின் நடிப்பு பார்ப்பவர்களை கவர்ந்து விட்டது. அந்த வகையில் அதிரடி ஆட்டத்தை காட்டும் விதமாக கெத்து காட்டி வருகிறார்.
மாமியாருக்கு மாசாக பதிலடி கொடுக்கும் அன்பு, கொஞ்சம் கத்துக்கோங்க மீனா
சும்மா தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று புலம்பி மூலையில் முடங்காமல், தப்புன்னா தப்புதான் என்ற பாலிசி படி தன்னை இந்த நிலைமைக்கு ஆக்கியவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக கதிர்வேல் மற்றும் ராஜ ராஜேஸ்வரி கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறார்.
அந்த வகையில் சிறகடிக்கும் ஆசை சீரியலில் மீனா மாதிரி அத்தை சொத்தை என்று குடும்பத்தில் வெறும் வேலைக்காரியாக மட்டும் இல்லாமல் ஒரு மருமகள் என்றால் பொறுப்பாகவும் இருக்கத் தெரிய வேண்டும். தவறு நடக்கிறது, பிரச்சனை வருகிறது என்றால் அதற்கு பதிலும் கொடுக்க தெரிய வேண்டும் என்பதற்கு ஏற்ப துணிச்சலாக செயல்பட்டு வருகிறார்.
அதிலும் ரவுடித்தனமாக இருக்கும் கதிரையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு அன்புவின் கேரக்டர் பார்க்க மாஸாக இருக்கிறது. இனி அன்புவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் கதிர்வேல் மற்றும் ராஜ ராஜேஸ்வரியின் அளப்பறைகள் ஒவ்வொன்றும் அட்டகாசமாக அமையப் போகிறது. தற்போது இந்த நாடகத்திற்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து பேவரைட் சீரியலாக இடம் பிடித்து விட்டது.
அந்த வகையில் அடுத்து வரும் எபிசோடுகளில் தாத்தா, அன்பு தான் என்னுடைய அடுத்த அரசியலுக்கான வாரிசு என்று சொல்லிவிடுவார் போல அந்த அளவிற்கு தாத்தா மற்றும் அன்புவின் காம்போ தூள் கிளப்ப போகிறது. அன்புவிடம் இருந்து இதே மாதிரி தான் ஒரு சம்பவத்தை எதிர்பார்க்கிறோம் என்பதற்கு ஏற்ப கதிர்வேலை வச்சு செய்கிறார். இன்னும் கூடிய விரைவில் சிறகடிக்கும் ஆசை சீரியலை ஓரங்கட்டி விட்டு டிஆர்பி ரேட்டிங்கில் பணிவிலும் மலர்வணம் இடம் பிடித்து விடும்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- மீனாவின் தம்பி ஆதாரத்தை முத்துவிடம் இருந்து கைப்பற்றிய ரோகினி
- தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து மீனாவை தொந்தரவு செய்யும் ரோகிணி
- திருந்திய மீனாவின் தம்பிக்கு குடைச்சல் கொடுக்கும் ரோகினி