செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ஒருவேளை சோறு கூட போடாத ரஜினி.. அவர் கூட விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க, சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Actor Rajini: சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சியில் இருந்தாலும் ரஜினியை சுற்றி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த புகழ் வெளிச்சமே இதற்கான ஒரு காரணமாகவும் இருக்கிறது. அதிலும் சமீப காலமாக ரஜினியையும், விஜய்யையும் ஒப்பிட்டு பேசி பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சூப்பர் ஸ்டார் பட்டத்தில் தொடங்கி தற்போது அரசியல் பிரவேசம் வரை இவர்கள் இருவருக்குமான ஒப்பீடுகள் சில விவாதங்களுக்கும் வழி வகுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சர்ச்சை பிரபலமான சவுக்கு சங்கர் ரஜினியோடு விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க என்று ஒரு பேட்டியில் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: விஜய்யின் கொஞ்ச நஞ்ச மானத்தை மொத்தமாக வாங்கிய எஸ்ஏசி.. வாரிசு வசூல் உண்மையா?

அதாவது விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறிகள் இப்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து பேசிய சவுக்கு சங்கர் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி ஏமாற்றியது போல் விஜய் கிடையாது. பல வருடங்களாகவே இதற்கான வேலைகளை தான் அவர் பார்த்து வருகிறார்.

மீனவர்களுக்கு ஆதரவாக இருந்ததில் தொடங்கி அண்ணா ஹசாரே போராட்டம், 234 தொகுதிகளிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்தது வரை அனைத்துமே அவருடைய அரசியல் வருகையை உறுதிப்படுத்துகிறது. அப்படி இருக்கும்போது அவர் வருவாரா என்று ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள். இதெல்லாம் பார்த்தால் உங்களுக்கு தெரியவில்லையா என அவர் ஆவேசமாக பேசியிருந்தார்.

Also read: இவங்கலாம் இயக்குனர்களா என ஆச்சரியமூட்டும் 5 நடிகர்கள்.. விஜய் படத்தை இயக்கிய கருங்காலி

அது மட்டும் இன்றி ரஜினி தன் பாக்கெட்டில் இருந்து பத்து பைசா கூட எடுத்து செலவு செய்ய மாட்டார். அதேபோன்று ராகவேந்திரா மண்டபத்தில் கறி சோறு போடுகிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது வரை அதை செய்யவே கிடையாது. தன்னுடைய ரசிகனுக்கு ஒருவேளை சோறு கூட போட முடியாத ரஜினியோடு விஜய்யை கம்பேர் செய்யாதீங்க என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் தான் இப்போது சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இதே சவுக்கு சங்கர் தான் விஜய் குறித்து சில எதிர்மறை கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார். இப்போது திடீரென அவர் இப்படி பேசி இருப்பது பல விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் சவுக்கு சங்கர் விஜய்யின் அரசியல் வரவை ரொம்பவே எதிர்பார்க்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Also read: புளிச்சு போன 7 வருட திருமண வாழ்க்கை.. தளபதியின் ஆஸ்தான நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா.?

Advertisement Amazon Prime Banner

Trending News