விஜய்யும் தோனி மாதிரிதான்.. தீவிர ரசிகனாக மாறிய கிரிக்கெட் வீரர்

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. ஆனால் பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனால் வசூலில் நல்ல லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய் தான். அவரது ரசிகர்கள் எப்படியும் படத்தை வணிக ரீதியான வெற்றியை கொடுத்துவிடுவார்கள். சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்த எஸ் ஜே சூர்யாவும் இதைப் பற்றி கூறியிருந்தார்.

அதாவது குடும்ப ஆடியன்ஸ் என்பது விஜய்க்கு மட்டும்தான். அவர் படத்தை பார்க்க மட்டும் தான் குடும்பம், குழந்தைகள் என அனைவரும் திரையரங்குகளுக்கு வருவதை பார்க்க முடிகிறது. இதனால் விஜய்யின் படங்கள் வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிறது என எஸ் ஜே சூர்யா கூறியிருந்தார்.

இந்நிலையில் தோனி மாதிரி தான் விஜய் என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதாவது தோனி கிரிக்கெட் மைதானத்திற்கு வந்தாலே அரங்கமே அதிரும். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கரவொலி எழும். அதேபோல் விஜய் திரையில் தோன்றினாலே திரையரங்கமே அதிரும்.

அப்போது யார் படம் வெளியானாலும் அங்கு செல்லுபடியாகாது எனக் கூறியிருந்தார். அதேபோல் விஜய்யும் கேஜிஎப் படத்தை நினைத்து பின்வாங்காமல் தனது படத்தை தைரியமாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் கூறியதை அறிந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அது என்னவோ உண்மைதான். விஜய் படத்திற்கு மட்டும் தான் இவ்வளவு கூட்டம் திரையரங்குகளில் அலைமோதுகிறது. விஜய்யின் இந்த அபரிவிதமான வளர்ச்சியை பார்த்து திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Next Story

- Advertisement -