Connect with us
Cinemapettai

Cinemapettai

vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லத்தி படப்பிடிப்பில் மயங்கி விழுந்த விஷால்.. விபத்தின் பின்னணி

மாஸ் ஹீரோவாக வலம் வந்த விஷாலுக்கு சமீபகாலமாக நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில்லை, சரியான நேரத்திற்கு வருவதில்லை என தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுக்களும் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் லத்தி படப்பிடிப்பில் விஷால் மயங்கி விழுந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. தற்போது விஷால் மயங்கி விழுந்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. லத்தி படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெறவுள்ளது.

இதற்காக இரவு பகலாக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகிறார். இதில் காட்டுக்குள் நடந்த சேசிங் காட்சிகளில் நிறைய பேர் நடித்துள்ளனர். மேலும் தொடர்ந்து 65 நாட்கள் இந்த சண்டைக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சரியான உறக்கம், உணவு, ஓய்வின்றி விஷால் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் 100 பேருடன் ஒரு சண்டைக்காட்சியில் ஈடுபடும் போது நீர் சத்து குறைவால் விஷால் மயங்கி விழுந்தார் என கூறப்படுகிறது.

சமீபகாலமாக விஷாலின் படங்கள் பெரிய வரவேற்பு கிடைக்காததால் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதனால் லத்தி படத்தில் முழு வீச்சாக செயல்பட்டு வந்த விஷால் தனது உடல்நிலையை பார்த்துக் கொள்ளாமல் இருந்ததே இதற்குக் காரணம்.

Continue Reading
To Top