விவேக்கை அவமானப்படுத்திய 2 ஹீரோக்கள்.. நான் இருக்கிறேன் என்று துணையாய் நின்ற குழந்தைகுணம் நடிகர்

தமிழ் சினிமாவின் இயக்குனர் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட பலர் கதாநாயகர்கள், வில்லன்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள், அப்போது முதல் இப்போது வரை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அவர் உருவாக்கிய நடிகர்கள் மட்டுமே இருந்து வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக உச்சநட்சத்திரம் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த்.அவர் உருவாக்கிய நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக்.

விவேக் படங்களில் கருத்துக்கள் கலந்த நகைச்சுவை இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அனைத்து நடிகர்களுக்கும் பிடித்த நகைச்சுவை நடிகர் என்றால் அது விவேக் மட்டும்தான். காரணம் அனைவருக்கும் உதவி செய்வது அனைவரிடமும் சகஜமாக பழகுவது தலைக்கணம் இல்லாமல் இருந்த ஒரே நடிகர் விவேக்.

Also Read : விவேக் இறந்த பின் வாய்ப்பை இழந்த செல்முருகன்.. கேவி ஆனந்த் மறைவுக்குப் பிறகு காணாமல் போன நடிகர்

இவரே வருத்தப்படும் அளவிற்கு ஒரு செயல் நடந்துள்ளது அதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், அது தற்போது வைரலாகி வருகிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதில் நடிகர்களுக்கு கதை சொல்வதுபோல் அவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதனால் அந்த படத்தின் இயக்குனர் ராமநாராயணன் உண்மையாவே பெரிய ஹீரோவை நடிக்க வைத்து அவரிடம் நீங்கள் கதை சொல்வதுபோல் காட்சியை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

விவேக் சரி என்று சொல்லி அவருக்கு பழக்கமுள்ள அந்த நேரத்தில் நல்ல மார்க்கெட் உள்ள இளம் நடிகர்களை அணுகியுள்ளார். அதில் ஒருவர் பிரசாந்த் அவரிடம் கேட்டதற்கு நான் வீட்டில் கேட்கணும் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று சென்று விட்டார். இன்னொருவர் விஜய் அந்த நேரத்தில் அவர் வளர்ந்து வந்த நேரம்.

Also Read : சாப்பாட்டுக்கு கூட காசு இல்ல, தங்க டாலரை பரிசளித்த நடிகர்.. கலாமிற்கு பின் விவேக்கே வியந்து பார்த்த ஒரே மனிதர்

விவேக்கிடம் விஜய் நான் இப்போது தான் வளர்ந்து வருகிறேன் இது போல் எல்லோரிடமும் நடித்தால் எனது மார்க்கெட் குறைந்துவிடும் அதனால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இந்த இரண்டு நடிகர்களும் இப்படி கூறியது அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த காட்சியை விஜயகாந்திடம் சொன்னபோது உடனே விவேக்கிற்காக சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்தார்.அந்த நேரத்தில் விஜயகாந்த் மிகப் பெரிய நடிகராக இருந்த சமயம் அது.

விவேக் என்ற நடிகரிடம் உதவி என்று கேட்டால் இல்லை என்று சொல்லாத குணம் படைத்த அந்த நடிகர் இந்த செயலை ஒரு பேட்டியில் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இது அந்த நடிகர்களை அசிங்கப்படுத்த இல்லை நான் கேட்டு இதுவரை எந்த நடிகர்களும் இல்லையென்று சொன்னதில்லை இவர்கள் இப்படி சொன்னது வருத்தமளிக்கிறது என்ற விதத்தில் கூறியிருக்கிறார்.

Also Read : விவேக்கின் சினிமா வளர்ச்சிக்கு நான்தான் காரணம்.. வெளிப்படையாக கூறிய பிரபலம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்