Connect with us
Cinemapettai

Cinemapettai

prabhu-kushboo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபு, குஷ்புவின் காதல் முறிவுக்கு இவர் தான் காரணமாம்.. சினிமாவில் ஹீரோ ஆனால் நிஜத்தில் வில்லன்!

தமிழ் சினிமாவில் என்னதான் நடிகர்கள் திரையில் காதல் செய்தாலும், திரைக்குப் பின்னால் இருக்கும் காதல், ரசிகர்களால் அதிகமாக பேசப்படும்.

அந்த வகையில் நடிகர் பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் இடையேயான காதல் கதை தெரியாத ஆளே இருக்காது. ஆகையால்தான் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ‘சின்னத்தம்பி’ படத்தில் பயங்கரமாக ஒர்க்அவுட் ஆனது.

இருப்பினும் இவர்களுடைய நிஜவாழ்க்கையில் நட்சத்திர தம்பதியராக மாறுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர் பிரபுவின் தந்தை சிவாஜிதான்.

ஏனென்றால் ‘பிரபு-குஷ்பூ இடையேயான காதல் ஒத்து வராது!’ என்று சிவாஜி பிரபுவுக்கு அறிவுறுத்திய பிறகு பிரபு குஷ்புவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த விஷயம் எல்லாம் குஷ்புவுக்கும் தெரியுமாம். எனவே சிவாஜியே தங்களுடைய காதல் சரிப்பட்டு வராது என்று கூறியதால் குஷ்புவும் பிரபுவும் தங்கள் காதலை முறித்துக் கொண்டனராம்.

prabu-cinemapettai

prabu-cinemapettai

எனவே பிரபு-குஷ்பூ காதலுக்கு சிவாஜிதான் வில்லனாக இருந்திருக்கிறார் என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

Continue Reading
To Top