அர்ஜெண்டினா நாட்டில் பேஸ்புக் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கியை வைத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக சிறுமி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் உள்ள Santa Rosa de Calchines என்ற நகரில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காட்டுப்பகுதிக்கு அருகில் இந்நகரம் உள்ளதால் வேட்டையாடுவதற்காக பெரும்பாலன மக்கள் துப்பாக்கிகளை சொந்தமாக வைத்திருப்பது வழக்கம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை ஒரு சிறுமி பேஸ்புக் லைவ் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்.! NGK ரிலீஸ் எப்பொழுது தெரியுமா.!

அப்போது, 13 வயதான சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளான். சிறுவனுடன் 12 வயது சிறுமியும் விளையாடியுள்ளார்.

சிறுமியை நிற்க வைத்து அவரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதுதான் விளையாட்டின் நோக்கம். துப்பாக்கியில் குண்டு இல்லை என நினைத்த சிறுவன் சிறுமியை நோக்கி சுட்டுள்ளான்.

அப்போது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு சிறுமியின் மார்பை துளைத்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சிறுமி கீழே சாய்ந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி.!

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அனைவரும் ‘தவறு நடந்து விட்டது. அனைவரும் வீட்டை விட்டு ஓடி விடுங்கள். சிறுமியின் தந்தை வந்தால் நம் அனைவரையும் கொன்று விடுவார்’ என அலறிக்கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

இச்சம்பவம் தகவல் அறிந்து வந்து வீட்டில் பார்த்தபோது சிறுமி பிணமாக கிடந்துள்ளார். விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உயிரிழந்த 12 வயது சிறுமியின் பெற்றோருக்கு அவர் ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.