விஜய் 69 படத்தில் காட்டு அசுரனை கூட்டி வந்த வினோத்.. அப்ப சண்டைல ஒரு 2000 சாவு உறுதி

Vijay 69: நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 8 மாதங்கள் ஆகின்ற நிலையில், இக்கட்சி ஆரம்பிக்கும் பொழுது தனது ஒப்புக்கொள்ளப்பட்ட படங்கள் முடிந்த பின், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அவரது கடைசி படம் ‘விஜய் 69’ என்று திட்டவட்டமாக கூறப்பட்ட நிலையில், . ‘த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் வெளியான போது, ஹெச்.வினோத்தான் விஜய்யின் கடைசிப் படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

அரசியலில் இறங்கிய பின்னும் சினிமாவில் அவருக்கு இருக்கும் மதிப்பும், அவரது செல்வாக்கும் இன்னும் பல படங்களு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் அவர் மார்க்கெட் ஸ்டடியாக உச்ச நடிகராக இருக்கும்போதே, சினிமாவுக்கு முழுக்குப் போட்டு அரசியலில் ஈடுபடுவதுதான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களாகவே விஜயின் கடைசிப் படத்தை யார் இயக்குவது? யார் தயாரிப்பது? யார் யார் நடிப்பது? என்றெல்லாம் கேள்வி எழுந்தன.

இதற்குப் பதில் கூறுவதுபோல் ‘KVN Productions’ கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி விஜய்யின் கடைசிப் படத்தின் அட்டேட்டை கொடுத்தது. அதில் ஒரு போஸ்டர் வெளியிட்டு, ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பதை உறுதிப்படுத்தியது. அதில், ஜனநாயகத்தின் விளக்காக இருப்பவர் விரைவில் வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால். விஜயின் கடைசிப் படம் இது என்று கூறி அவரைப் பற்றி ஒரு டாகுமென்டரியை ரிலீஸ் செய்து ரசிகர்களின் கருத்துகளைக் கேட்டிருந்தது. இது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி சினிமாவைவிட்டு உண்மையில் விலகுகிறாரா? என்று கேள்வி எழுந்தபோது, சினிமா விமர்சகர்கள் இல்லை விஜய் சினிமாவை விட்டு விலக மாட்டார். அரசியலில் இருந்தாலும் அவர் சினிமாவிலும் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், கேவிஎன் புரடக்சன்ஸ் இன்று காலையில் ‘விஜய்69 ‘படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், விஜயுடன் இணைந்து, ‘அனிமல்’ என்ற படத்தில் வில்லனாக நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த பாபி தியோல் தான் விஜயின் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வெங்கட் நாராயணனுடன் இணைந்து இப்படத்தை ஜெகதீஸ் பழனிசாமி துணை புரடியூசராகப் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலி தியோல் சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக மிரட்டியுள்ள நிலையில், வரும் நவம்பர் 14 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.


vijay69

எனவே பாலிவுட் நடிகர் பாபி தியோல் விஜயின் 69 படத்தில் நடிக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படமும் பான் இந்தியா படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இனி ஒவ்வொரு நடிகர்களாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என்று தெரிகிறது. அதேபோல் இப்படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News