நடிகை ஸ்ரீதேவி 13 ஆகஸ்ட் மாதம் 1963 ஆண்டு பிறந்தார் 24 பிப்ரவரி மாதம் 2018 இறந்துவிட்டார் இவர் தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.

sridevi

கடந்த சனிக்கிழமை ஸ்ரீதேவியின் மரண செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர், உடனே ஞாயிறு அன்று தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம் ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

sridevi

அந்த விமானம் மூன்று நாட்கள் காத்திருந்த நிலையில் அந்த விமானம் இன்று ஸ்ரீதேவியின் உடலை சுமந்து கொண்டு மும்பை வந்தடைந்தது.

sridevi

அந்த மூன்று நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சம் வாடகை செலுத்தப்பட்டதாக கூறபடுகிறது.