fbpx
Connect with us

Cinemapettai

ஜான்வியின் புலம்பலால் தட்டி பறிக்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜான்வியின் புலம்பலால் தட்டி பறிக்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு!

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, தனது செயலால் மிகப்பெரிய பட வாய்ப்பு ஒன்றை நழுவவிட்டிருக்கிறார்.

பாலிவுட்டில் வாரிசு ஹீரோ, ஹீரோயின்களின் ஆதிக்கம் அதிகம் என்றே கூறலாம். ரன்பீர் கபூர், சோனம் கபூர், ஆலியா பட் என முன்னணி நடிகர்கள் கூட வாரிசு நடிகர்கள்தான் அங்கே. இந்த வரிசையில் மேலும் சில வாரிசு நடிகைகள் அறிமுகமாக இருக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி மற்றும் குஷி, ஷாருக்கானின் மகளான சுஹானா மற்றும் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் என பெரிய பட்டாளமே தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில் முன்னணியில் இருப்பது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும், சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் ஆகியோர்தான். இஷான் கட்டார் இயக்கியுள்ள தடக் படம் மூலம் ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படம் ஜூலையில் வெளியாக உள்ளது. அதேநேரம், சாராவின் அறிமுகபடமான கேதர்நாத் படம் டைரக்டர் – தயாரிப்பாளர் மோதலால் பாதியில் நிற்கிறது. தோனியின் பயோபிக்கில் நடித்து பிரபலமான சுஷாந்த்சிங் ராஜ்புத் நடிக்கும் அந்த படத்தின் அபிஷேக் கபூர் மற்றும் தயாரிப்பு நிறுவனமான கிரி அர்ஜ் எண்டர்டெய்ன்மெண்ட் இடையே உரசல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், சாராவின் பாலிவுட் அறிமுகம் தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில், ஸ்ரீதேவி மற்றும் சயீப் அலிகான் குடும்பத்துக்கு நெருக்கமான இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் -இயக்குநர் ரோஹித் ஷெட்டி கூட்டணியில் சிம்பா படம் உருவாக இருக்கிறது. டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்க ஜான்வி மற்றும் சாரா ஆகிய இருவரில் ஒருவரை தயாரிப்பு தரப்பு பரிசீலித்துள்ளது. இந்த படத்தின் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்த வாய்ப்பில் ஜான்வி முந்துவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல், ரன்வீர் சிங்குடன் நடிப்பது குறித்து ஜான்வி புலம்பியது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் காதுகளை எட்டியது.

இதனால், ரன்வீர்சிங்-ரோஹித் ஷெட்டி- கரண் ஜோஹர் என பெரிய பிரபலங்கள் இணையும் பட வாய்ப்பை ஜான்வி தற்போது இழந்திருக்கிறார். அதேநேரம், இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சயீப் அலிகான், சிம்பா பட வாய்ப்பைத் தனது மகளுக்கு சாதகமாக்கிக் கொண்டார். இதனால், சாரா செம ஹேப்பி அண்ணாச்சி. இந்த தகவலை, தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் இயக்குநர் ரோஹித் ஷெட்டி ஆகிய இருவருமே உறுதி செய்துள்ளார். இதன்மூலம், கேதர்நாத் படம் இல்லாமல், சிம்பா படம் மூலம் சயீப் அலிகானின் வாரிசு திரையுலகில் கால் பதிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top