புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால அடிப்பேன்.. கோபத்தில் கொந்தளித்த பிக்பாஸ் நடிகை

Bigg Boss: சமீபத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. எப்போது இரவு ஒரு பெண் தனியாக ரோட்டில் நடந்து செல்ல முடிகிறதோ அப்போதுதான் சுதந்திரம் கிடைத்ததாக சொல்ல வேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் பெண்களுக்கு எதிரான வன்புணர்வு செய்தி வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவரை மோசமான முறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்காக பலர் இப்போது குரல் கொடுத்து வரும் நிலையில் பிக் பாஸ் நடிகையும் அதற்கான போராட்டத்தில் இறங்க உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் சனம் செட்டி. இவர் சென்னை காவல் ஆணையத்தில் கொல்கத்தா மருத்துவர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி கேட்டிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் சனம் செட்டி ஆவேசமாக பேசினார்.

அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை பற்றி பேசிய பிக் பாஸ் நடிகை

அதாவது இதுபோன்ற சம்பவமும் கொல்கத்தாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தான் அரங்கேறி வருகிறது. கிருஷ்ணகிரியில் கிட்டத்தட்ட 13 மாணவிகளுக்கு இதே போன்ற வன்கொடுமை நடந்துள்ளது. அதிலும் அந்த பள்ளியின் ஆசிரியர், முதல்வர் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர்.

அதேபோல் சமீபத்தில் கேரளா சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதை பற்றி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. கேரளாவில் மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் தலைவிரித்து ஆடவில்லை. தமிழ் சினிமாவிலும் இது அதிகமாக இருக்கிறது.

என்னை கூட அட்ஜஸ்ட்மென்ட் கேட்டிருக்கிறார்கள். அவர்களை செருப்பால் அடிப்பேன் நாயே என்று சொல்லி உள்ளேன். இதுபோன்று இனி நடக்க கூடாது என்றால் இதுதான் சரியான நேரம். அடிப்படையிலேயே ஆண்களின் மனதில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்‌. அதற்கான போராட்டம் தான் இது என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

களைகட்ட போகும் பிக் பாஸ்

- Advertisement -

Trending News