Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எவ்வளவு பட்டாலும் எனக்கு புத்தியே வராது என்று சொல்வதற்கு ஏற்ப கோபி நிலைமை மட்டமாக மாறிவிட்டது. பகலெல்லாம் பாக்யாவிடம் சண்டை போட்டு வீர வசனம் பேசி பழிவாங்க துடிப்பார். இரவு ஆனதும் கண்ணுமுன்னு தெரியாமல் குடித்துவிட்டு எங்கேயாவது மட்டையாகி விழ வேண்டியது. இதுவே இந்த கோபி அங்களுக்கு வேலையா போச்சு.
எப்படி இருந்த கோபி சார் இப்படி ஆயிட்டார் என்று சொல்லும் அளவிற்கு தான் மோசமாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது தாத்தாவின் இறப்பை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாக்கியா அவருடைய ஹோட்டலில் தாத்தாவின் படத்தை வைத்து மாமனாரை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
பாக்யாவிடம் தொடர்ந்து அசிங்கப்படும் திருந்தாத கோபி
அந்த நேரத்தில் கோபி அலையா விருந்தாளி போல கூப்பிடாத இடத்திற்கு ஓடி வந்து மொத்த கோபத்தையும் கொட்டி தீர்க்கும் விதமாக ஆணவத்தில் பேசி விட்டார். அதாவது நான் எப்படி இருந்தாலும் என்னுடைய பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாக என்னுடைய பொறுப்புகளை செய்திருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பா எனக்கு ஒரு நல்ல அப்பாவாக இருந்தது இல்லை என்று சொல்லி அனைவரது முன்னிலையில் ஈஸ்வரியை காயப்படுத்தி விட்டார்.
ஆனால் கோபி சொல்வது மிக தவறாக இருந்தாலும் ஒரு விதத்தில் கோபியின் வாழ்க்கை தற்போது தடபுரண்டு இருப்பதற்கு கோபியின் அப்பா அம்மாவும் ஒரு விதத்தில் காரணமாகத்தான் இருக்கிறார்கள். அதாவது படித்த பொண்ணுதான் வேணும் எனக்கு பிடிச்ச பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லியும் அப்பொழுது காது கொடுத்து கேட்காத அம்மா அப்பா, பாக்யாவை கல்யாணம் பண்ணி வைத்தார்கள்.
இதனால் வேண்டாம் வெறுப்பாக பாக்கியவுடன் வாழ்ந்து வந்த கோபி ஒரு சூழ்நிலைக்கு மேல பாக்யாவை வேண்டாம் என்று முடிவு எடுக்கும்படி ராதிகாவை பார்த்ததும் பின்னாடி போய்விட்டார். இதனால் தனக்கு ஒரு சிறந்த அப்பாவாக இருந்ததில்லை என்று கோபி அனைவரது முன்னிலையிலும் கூறிவிட்டார். இதை கேட்டு பாக்கியவால் சும்மா இருக்க முடியவில்லை. உடனே கோபியை பார்த்து பிள்ளைகளை கஷ்டப்படுத்தியதை தவிர வேறு எதுவுமே நீங்கள் பண்ணினதில்லை.
ஆனால் இப்படி இருக்கும் பொழுது உங்களை நல்ல அப்பாவாக சொன்னீங்க பாருங்க அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கோபியை அசிங்கப்படுத்தும் அளவிற்கு பாக்யா பதிலடி கொடுத்து விடுகிறார். இப்படியே இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டு நாடகத்தை இன்னும் பல மாதங்களாக இழுத்து அடித்துக் கொண்டு போய் விடுவார்கள். இதற்கு ஒரு முடிவே இல்லையா என்பதற்கு ஏற்ப வந்தா சுட்டா செத்தா ரிப்பீட்டு, வந்தா சுட்டா செத்தான் ரிப்பீட்டு என்று போய்க்கொண்டே இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- அப்பா மகன் உறவே இல்லாமல் கோபியை விட்டுப் போன பந்தம்
- பாக்கியலட்சுமிக்கு முன் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கியமான சீரியல்
- ஈஸ்வரி கொடுத்த டார்ச்சரால் பிக் பாஸ் போகும் மருமகள்