Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசு: தீர்ப்பு குறித்து குஷ்பு கருத்து
தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசை உச்சநீதிமன்றம் தந்துள்ளது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
தீர்ப்பு குறித்து குஷ்பு, “தமிழ்நாட்டின் குடிமகளாக நான் ஆறுதல் அடைந்துள்ளேன். எனது மாநிலம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
நம்மை சூழக் காத்திருந்த இருண்ட பேரிடர் ஒன்று முடிந்திருக்கிறது. மறைந்த முதல்வர் அம்மா மனம் சாந்தியடையும்.
தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசை உச்ச நீதிமன்றம் தந்துள்ளது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் அச்சமின்றி வாழலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The best valentine gift to the people of TN by the #SC..people can breathe normally n live without any fear
..— Khushbu Sundar.. (BJPwaalon ab thoda araam karlo) (@khushsundar) February 14, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
